370-ஐ மீண்டும் அமல்படுத்தக் கோரி கார்கிலில் போராட்டம்... மறுப்பு தெரிவிக்கும் மாஜிஸ்திரேட்!

மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் உருவாக இருக்கும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அவர்கள் புரிந்து  கொள்வார்கள்.

Ankita Dwivedi Johri

Kargil protesters want Article 370 back : 05ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது என்றும் அதற்கான மறுசீராய்வு மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. பல்வேறு முக்கிஉய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் அரசியல் சட்டம் 370வது நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு வீட்டுக் காவலில் இருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கார்கில் மாவட்டத்தில் உள்ள ஜாய்ண்ட் ஆக்சன் கமிட்டி (Joint Action Committee (JAC) of Kargil) என்ற அமைப்பின் உறுப்பினர்களும், அப்பகுதியில் வாழும் மக்களும் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டம் 370வதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதில் 12 நபர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : PM Narendra Modi Address to Nation: ‘புதிய பாரதம், புதிய ஜம்மு & காஷ்மீர், புதிய லடாக்’ – பிரதமர் மோடி2019

Kargil protesters want Article 370 back – மறுப்பு தெரிவிக்கும் மாஸ்திரேட்

இது குறித்து அம்மாவட்ட மாஸ்திரேட் பஷீர் உல்-ஹக் சௌத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரையில் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 144 தடை உத்தரவு தொடர்ந்து நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியேற துவங்கியுள்ளனர் என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு தகவல் அளித்துள்ளார்.

நேற்று பிற்பகல் (08/08/2019) 3 மணிக்கு அவர் அளித்த பேட்டியில் “நாளை கார்கில் பகுதியில் இயல்பு நிலை திரும்பிவிடும். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்கள் இந்த முடிவினை வரவேற்கின்றனர்” என்று கூறியுள்ளார்.  நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து கார்கில் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபடக் கூடும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் ஆகியவை மூடியவாறே உள்ளது. கார்கில் நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : முகலாயர்களுக்கு முந்தைய காஷ்மீர் வரலாறு

1 மணிக்கு பிறகு தான் உள்ளூர்வாசிகள் சிலர் வெளியில் நடமாடத் துவங்கினர். லெஹ் மற்றும் கார்கிலுக்கும் இடையேயான 216 கி.மீ தூரத்தில் 7 செக்போஸ்ட்கள் வைக்கப்பட்டு, மக்களின் நடமாட்டம், யார் உள்ளே வருகிறார்கள், வெளியே செல்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 06:30 மணிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு முழுவதும் நீக்கப்பட்டது. ஆனால் மொபைல் வசதிகள் மற்றும் இண்டர்நெட் சேவைகள் இன்னும் செயல்பட ஆரம்பிக்கவில்லை.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த முடிவுகளின் பயனை உணரத் துவங்குவார்கள். இதன் மூலம் உருவாக இருக்கும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அவர்கள் புரிந்து  கொள்வார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், மத அமைப்புகள், மற்றும் மக்கள் மத்தியில் இந்த மாற்றத்தினால் ஏற்படும் நன்மைகளை விரைவில் விளக்க உள்ளோம் என்றும் மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close