Kargil Vijay Diwas 2019: இந்திய ராணுவத்தின் உறுதியையும், வலிமையையும் ஒருசேர உலகிற்கு பறைசாற்றிய தருணம் கார்க்கில் போர் என்றால் அதை எவராலும் மறுக்கவும் முடியாது.மறைக்கவும் முடியாது. நமது நாட்டுக்காக எத்தனையோ வீரர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்த நாள் இன்று.
கார்கில் போரில் வீரமணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை வெற்றி கொண்டு கார்கிலில் மீண்டும் இந்திய கொடியை நாட்டிய இந்திய ராணுவ வீரர்கள் பறக்க விட்டதை அவ்வளவு எளிதாக மறுந்து விட முடியுமா என்ன?
இந்தியாவை பாதுகாத்த வீரர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குவோம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு பாகிஸ்தானிய படைகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோர் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். ஊடுருவிய படைகள் முக்கிய இடங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இவர்களை விரட்டி அடிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலின் பெயர் தான் ’ஆப்ரேஷன் விஜய்’.
read more.. வீர் சக்ரா விருது பெற்றவர் இன்று ட்ராஃபிக் கான்ஸ்டபிள்!
பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும் கொன்று குவித்தது இந்திய ராணுவம். நமது தரப்பில் 576 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து கார்கிலில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். ஜூலை 26, 1999ல் இந்திய ராணுவ கார்கில் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல் இந்நாள் ’விஜய் திவாஸ்’ என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கார்கில் வெற்றி தினத்தில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அரிய புகைப்படை தொகுப்பு இதோ




பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட தலைவர்களும், கார்கில் வெற்றி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, வெற்றி தினத்தை கொண்டாட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் உள்ள நினைவிடத்துக்கு சென்று, அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.