Karnataka 10th exams : கர்நாடகா மாநிலத்தில் 25ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை சுமார் 8,48,000 மாணவர்கள் எழுதி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பிறகே இந்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
Advertisment
ஹாசன் மாவட்டம் அரகால்குட் வட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் சனிக்கிழமை தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரை தொடர்ந்து தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது தேர்வு அறைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த அறையில் தேர்வு எழுதிய 20 மாணவர்களும் தேர்வு கண்காணிப்பாளர்களும் மருத்துவ கண்காணிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் அல்லது அச்சம் காரணமாக தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு தேர்வினை எழுத அனுமதித்துள்ளது கர்நாடக மாநிலம். இருப்பினும் 97.93% மாணவர்கள் தேர்வுகளை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil