Advertisment

ரூ 21 லட்சம் இணையவழியில் மோசடி: கர்நாடக இளைஞர்கள் 2 பேரை கைது செய்த புதுவை போலீசார்

ரூபாய் 21 லட்சம் இணைய வழியில் மோசடி செய்த கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை புதுவை போலீசார் இன்று அதிரடியாக  கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Puducherry 1

ரூ 21 லட்சம் இணையவழியில் மோசடி: கர்நாடக இளைஞர்கள் 2 பேரை கைது செய்த புதுவை போலீசார் 

ரூபாய் 21 லட்சம் இணைய வழியில் மோசடி செய்த கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை புதுவை போலீசார் இன்று அதிரடியாக  கைது செய்தனர்.

Advertisment

ரூ. 21,50,000 இணைய வழியில் மோசடி செய்த இருவரை கர்நாடகா சென்று இணைய வழி  சிறப்பு படை போலீஸ் சார் இன்று கைது செய்தது.

புதுச்சேரி, ஆனந்தரங்க பிள்ளை நகரில் வசிக்கும் ஜெயரட்சகன் என்பவர் கடந்த 28.8.2023 புதுவை சைபர்  காவல் நிலையத்தில்  கொடுத்த  புகாரில்  கர்நாடகாவை சேர்ந்த சுகாஷ் என்பவர் வாட்ஸ் அப் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அவர் இந்திய பண மதிப்பில் Rs.88 உள்ள 1 USD  அமெரிக்க டாலரைஐ Rs.85 தருவதாக கூறினார் மேலும் அவரிடம் வெளிநாட்டு பரிவர்த்தனை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை உண்மை என நம்பி ரூபாய் 21 லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை மேற்படி சுகாஸ் கூறிய நான்கு வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். 

சில நாட்களுக்குப் பிறகு சுகாஸ்-ஐ தொடர்பு கொண்ட பொழுது தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஜெயரட்சகன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்: 52 /2023 U/S 419,420 IPC and 66 D of IT act 2000 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனிப்படை

 வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பிடிப்பதற்காக சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன்  உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர்கள்  கார்த்திகேயன் மற்றும்   B.C.கீர்த்தி தலைமையில் காவலர்கள் மணிமொழி, சதீஷ், வினோத் மற்றும் பெண் காவலர் ரோஸ்லின் மேரி ஆகியோர்களைக் கொண்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

ஐ.டி படித்தவர்கள்

 குற்றவாளி சுகாஷ் மற்றும் அவரது நண்பர் சித்தார்த தாவணிகரை மாவட்டம் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட இருவருமே IT இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும். உடனடியாக தனிப்படை பெங்களூர் விரைந்து சுகாஷ் மற்றும் சித்தார்த்தை கைது செய்தனர்.

20 கிரெடிட் கார்டு

மேற்படி குற்றவாளிகளிடம் இருந்து 6 மொபைல் போன், 20 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்  லேப்டாப்,  ஐந்து வங்கி கணக்கு புத்தகங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இரண்டு நபர்களையும் புதுவை தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆயர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கர்நாடகாவை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி இருக்ககூடும் என்ற கோணத்திலும்  புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றார்.  அவர்களுடைய பல்வேறு வங்கி கணக்குகளைமுடக்கி எவ்வளவு பணம் உள்ளது , பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் விசாரிக்க எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

22 கோடி கொள்ளை 

மேலும், இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும் 22 கோடி அளவிற்கு புதுச்சேரியில் மக்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்து உள்ளனர் என்றும் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம்  தருகிறோம், மார்க்கெட் விலையை விட அதே பொருளை 20%   குறைந்த விலையில் கொடுக்கின்றோம் என  இணைய வழியில் யாராவது தொடர்பு கொண்டால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், OLX போன்ற பொருட்களை வாங்குகின்ற விற்கின்ற தலங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருவதால் அதில் பொருட்களை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுதோ எந்த உத்தரவாதமும் இல்லாமல் முன் பின் பழக்கம் இல்லாத  தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று  பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment