கர்நாடகா அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை 8 பேர் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு பாஜகவால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணி அரசை காக்கவும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கவும் காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்துள்ளது.
கர்நாடகா அரசியல் : காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து இன்று பெங்களூரில் உள்ள விதான் சவுதாவில் பிற்பகல் 3.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களையும் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்
ஓரிரு எம்.எல்.ஏக்கள் தவிர அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தலைமறைவாக ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
முன்னதாக குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக கூறப்படும் தகவலால் அவசரமாக இந்த கூட்டத்தை கூட்டுகிறார்.