கர்நாடகா மாநிலத்திற்கான 2018 சட்டசபை தேர்தல் தேதி மே மாதம் 12 ஆம் தேதி நடைப்பெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.
கர்நாடாகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வரும் மே மாதத்துடன், காங்கிரஸ் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரவுள்ளதால் அம் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று, (27.3.18) டெல்லியில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தின் முடிவில், கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, இன்று காலை 11. 30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், கர்நாடாகா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் குறித்த முழு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுக் குறித்து அவர் பேசியதாவது, “கர்நாடாகா மாநிலத்தில், மே 28 ஆம் தேதியுடன் காங்கிரஸ் ஆட்சிக் காலம் முடிவடைகிறது. இந்நிலையில், கர்நாடாகாவில் 224 தொகுதிகளுக்கும் வழக்கம்போல, ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெறவுள்ளவது. வரும் மே மாதம், 12 ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் கர்நாடாகாவில் அமலுக்கு வந்தது.
வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைப்பெறும். பின்பு, வேட்பு மனு மீதான பரீசீலனை ஏப்ரல் 25 ஆம் தேதி நடத்தப்படும். வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாள் ஏப்ரல் 27 ஆம் தேதி ஆகும். மே மாதம் 12 ஆம் தேர்தல் நடத்தப்பட்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குரிமையை பயன்படுத்தவும், அதுக் குறித்தும் விழிப்புணர்வை அனைத்து வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்க தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபடவுள்ளனர். வாக்குசீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னடாவிலும் அச்சடிக்கப்படுகின்றன.
வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாமல் இருக்க கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்படும். வாக்களிக்கும் மின்னணு இயந்திரங்களுடன் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதற்கான விவிபிடி இயந்திரம் இணைக்கப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கப்படும்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ. 28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ” என்று தெரிவித்துள்ளார் .
மேலும், கர்நாடாகாவில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தால், வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பத்தில் சிக்கல் ஏற்பட வாய்புள்ளதா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஓம்பிரகாஷ் ராவத், “ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம். தேர்தல் நடத்தை விதி காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது. தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை அமைப்பதற்கும் எந்தவித தொடர்பு இல்லை” என்றார்.
சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே ஒன்றில், கர்நாடாகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் 25ம் தேதி வரையில் 154 தொகுதிகளில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் நேற்று வெளியாகின. காங்கிரஸ் கட்சி 126 இடங்களையும், பிஜேபி 70 தொகுதிகளைப் பெறும் என்றும், மஜத 27 தொகுதிகளை வெல்லும் எனவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.