scorecardresearch

கர்நாடக தேர்தல்: உறுதியாக நிற்கும் காங்கிரஸ்; உள்ளே ஓயாத சலசலப்புகள்

சித்தராமையா தனது ஆட்களுக்கு சீட்டுகளைப் பெறத் தவறிய இரண்டு இடங்களில் அவருக்கும் சிவகுமாருக்கும் இடையிலான மோதல் சத்தமில்லாமல் இருந்தாலும் தொடர்ச்சியான அதிகார விளையாட்டின் சலசலப்புகள் வெளியே தெரிகிறது.

Karnataka Assembly election, DK Shivakumar, Karnataka Assembly polls, Karnataka Polls 2023, Akhanda Srinivasamurthy, Karnataka congress, Siddaramaiah, Political Pulse, Indian Express, India news, current affairs
கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார்

2018 கர்நாடகத் தேர்தலில், மாநிலத்திலேயே மிக அதிகமாக 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள புலகேசிநகர் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அழைப்பின் பேரில் சீனிவாசமூர்த்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் 20130ல் இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையிடம் தனது கோரிக்கையை எழுப்பினார். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லாததால், சீனிவாசமூர்த்தி கட்சியில் இருந்து வெளியேறினார்.

ஒரு நாள் கழித்து, புலகேசிநகரில் இருந்து காங்கிரஸ் கட்சி சீட்டு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் முகாமில் உள்ள ஏ.சி. சீனிவாசாவுக்கு அளிக்கப்பட்டது.

சீனிவாசமூர்த்தி நடந்த விஷயங்களுக்கு சிவகுமாரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அவர் ஒரு போலி அறிக்கையை பயன்படுத்தி அவர் வலுவான பதவிக்கு எதிரான நிலையை எதிர்கொள்கிறார் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸில் என்னுடன் சித்தராமையாவும் ஜமீர் அகமதுவும் நின்றனர்” என்று சீனிவாசமூர்த்தி கூறினார்.

இப்போது பெரிய கேள்வி என்னவென்றால், அந்தத் தொகுதியில் உள்ள பெரிய முஸ்லிம் சமூகத்தின் மரியாதைக்குரியவராக ஜமீர் அகமது கான் இருக்கிறார். 2018-ல் இந்த தொகுதியில் இருந்து காங்கிரசுக்காக மிகப் பெரிய வெற்றியைத் தந்த சீனிவாசமூர்த்தியுடனான கூட்டணி மதச்சார்பற்ற ஜனதா தளம் காலத்துக்கு திரும்புகிறது. ஜமீர் அகமது அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசா அல்லது சீனிவாசமூர்த்தியை ஆதரிப்பார்.

மே 10-ம் தேதி தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் முக்கிய கவலையாக இருக்கும் சித்தராமையா மற்றும் சிவக்குமார் பிரிவுகளுக்கு இடையே காங்கிரஸில் உள்ள ஆழமான பிளவுகளுக்கு புலகேசிநகர் நிகழ்வுகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகா பொறுப்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா போன்ற ஒரு நிலையான சிந்தனையாளர் முன்னிலையில் சில பிரிவுகளை மத்திய காங்கிரஸ் தலைமை சமாளித்து வருகிறது. ஆனால், இரு தலைவர்களுக்கும் இடையே விஷயங்கள் மோதலின் விளிம்பில் இருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக காங்கிரஸைப் பொறுத்தவரை, லிங்காயத்துகள் போன்ற மேலாதிக்க சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சாவடி போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேறியது மற்றும் பா.ஜ.க அதிருப்தியாளர்கள் கட்சியை விட்டு வெளியேறியதில் இந்த மோதல் பெரும்பாலும் கவனம் பெறத் தவறிவிட்டது.

மற்றொரு நிகழ்வில், சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த மற்றும் கடூர் தொகுதிக்கு ஆசைப்பட்ட முன்னாள் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஒய்.எஸ்.வி. தத்தா, சிவக்குமாரின் தலைமையை ஏற்றுக்கொள்வது கடினம் என்று அவர் கூறிய ஆடியோ ஒன்று வெளியானது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அந்த ஆடியோவில் அவர், “கடூர் தொகுதியை சித்தராமையாதான் தீர்மானிக்கிறார். என்னைப் பொறுத்தவரை, சித்தராமையாவின் வார்த்தைகள் இறுதியானது… எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் யார் தலைவராக வேண்டும் என்று கேட்டால், நான் சித்தராமையா என்று சொல்வேன்” என்று கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு, கடூருக்கான வேட்பாளர் பட்டியலில் தத்தாவின் பெயர் இல்லை. தத்தா பிராமணராக இருப்பதால், ​​கடூர் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சித்தராமையாவுடய குருபா ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்த பி.எஸ். ஆனந்துக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இது சித்தராமையாவுக்கு கொஞ்சம் அசைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தத்தாவும் உடனடியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு திரும்பினார். தத்தா, இந்த பகுதியில் உள்ள மற்றொரு முக்கிய சமூகமான வொக்கலிகர்கள் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறார்.

பொதுவில் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாகத் தோன்றுகிறார்கள். இது கட்சிக்கு கூடுதல் மெருகூட்டுகிறது. “யார் முதல்வராக வரவேண்டும் என்பது எனக்கு முக்கியமில்லை என்பதை மாநில தலைவர்களிடம் கூற விரும்புகிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். எம்.எல்.ஏ.க்களும், உயர் மட்ட தலைமையும் முதல்வரை முடிவு செய்வார்கள்” என்று ஏப்ரல் 16-ம் தேதி ராகுல் காந்தி கர்நாடகாவில் இருந்தபோது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

ஒரு சமூகத்தின் வாக்குகளை மட்டும் நம்பி யாரும் முதல்வர் ஆக முடியாது என்று ஜமீர் அகமது கூறியதை சுர்ஜிவாலா பகிரங்கமாக கண்டித்தார் – அது சிவகுமாரின் கேலிக்கூத்தாக பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் தலைமை சித்தராமையாவும், சிவக்குமாரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக பிரசாரம் செய்து, தங்களின் வாக்கு தொகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் மறைமுகமாக எந்தவிதமான வார்த்தைப் போரையும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

கர்நாடகாவில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே ஒரு மேலாதிக்கப் போர் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. அது தேர்தல் நெருங்கி வருவதால் சூடுபிடித்துள்ளது. ஆகஸ்ட் 3, 2022-ல் தனது 75வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் ஒரு செய்தியை சித்தராமையா அனுப்பியிருந்ததால், அதில் ராகுல் கலந்துகொண்டார். அந்த மேடையில் இருந்து ராகுல், சித்தராமையாவைக் கட்டிப்பிடிக்கும்படி சிவகுமார் சைகை செய்து, மேடையில் இருந்து சமிக்ஞை செய்தார்.

முன்னாள் முதல்வரின் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது: சித்தராமையாவுக்கு, மத்திய தலைமை தன் பக்கம் சாய்ந்துள்ளது. இது ஒரு உந்துதலாக இருக்கிறது என்று கூறினார்.

சிவக்குமார் கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் வாக்காளர்களிடம் பேசி வருகிறார். தன்னைச் சேர்ந்த வொக்கலிகா சமூகத்தினர் காங்கிரசுக்கு வாக்களித்தால் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக வாக்காளர்களிடம் கூறி வருகிறார்.

சீட்டு கொடுப்பதில் சித்தராமையா முகாம் தனது கருத்தை முன்வைப்பதால், சிவகுமார் சமீபத்தில் மற்றொரு அஸ்திரத்தை வீசினார். அவர் கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் கீழ் முதல்வராக பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இதற்கு சிவக்குமார் கடுமையாகப் போட்டியிட முடியாததும் ஒரு காரணம். அவர் மீதான பல்வேறு பணமோசடி வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ விசாரணை, வருமான வரி விதிமீறல் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் பெரும்பாலும் நீதிமன்றங்களில் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளார்.

பா.ஜ.க-விடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ள லிங்காயத் தலைவர்களின் பலத்தின் கீழ், இரு முகாம்களுக்கு இடையே நிலவும் மெல்லிய சமநிலை எந்த நேரத்திலும் உடைந்து விடும் என்று கட்சியில் உள்ள சிலர் கவலைப்படுகிறார்கள்.

மேலும், பல சாதிகள் மற்றும் இன்னல்களை கருத்தில் கொண்டு, பா.ஜ.க-வின் வாக்கு தளத்தை கைப்பற்ற காங்கிரஸ் தனது வாக்குகளை தியாகம் செய்யுமா என அதன் போட்டியாளர்கள் கேட்கின்றனர். “ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்படி, காங்கிரஸ் அனைவரையும் உள்ளடக்கிய கட்சி. சாதி சார்ந்த முறையீடுகளை செய்யாது என்று நான் நினைத்தேன். எப்படியாவது, பெரிய லிங்காயத் தலைவர்கள் திரும்பினால், வொக்கலிகா, குருபா மற்றும் தலித் தலைமைக்கு என்ன நடக்கும்” என்று பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி லஹர் சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka assembly polls congress dk shivakumar and siddaramaiah friction

Best of Express