தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
கன்னட ஆதரவு அமைப்புகள் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு தலைவர் எஸ்.பிரான்சிஸ் கூறுகையில், கர்நாடகாவில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள், தங்கள் ஆதரவை தெரிவித்து பந்த் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
பெங்களூருவில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் உள்ளனர், காவிரி நதிநீர் பிரச்சனை அனைவருக்கும் தெரியும். இங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை யதார்த்தம் தெரியும், எனவே பந்த்க்கு ஆதரவளிப்பார்கள், என்றார்.
தமிழ் கன்னட நல்லிணக்கம் மற்றும் நல அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் என்.ராமச்சந்திரன் கூறுகையில், கடந்த 1991 மற்றும் 2014ல் சமூக விரோதிகள் போராட்டத்தை பயன்படுத்தி தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அது போலல்லாமல் மக்கள் இப்போது மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்.
கர்நாடகாவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் அளித்த ஆதரவை வரவேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ’இங்குள்ள தமிழர்களும் காவிரி நீரை நம்பி உள்ளதாகவும், பந்த் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவு தமிழக அரசுக்கு வலுவான செய்தியை அனுப்பும்,
கர்நாடகாவில் உள்ள அணைகளில் அதிக அளவு தண்ணீர் இல்லை, என்று கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“