கொலை செய்வதற்கான சதி குற்றச்சாட்டு முதல் அவதூறு வழக்குப் போடுவேன் என்று மிரட்டல் விடுப்பது வரை மத்திய அமைச்சர் பகவந்த் குபாவுக்கும், பா.ஜ.க எம்.எல்.ஏ பிரபு சவுகானுக்கும் இடையே பிதாரில் கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
பிதார் மாவட்டத்தில் உள்ள அவுராத்தைச் சேர்ந்த இரண்டு பா.ஜ.க தலைவர்களுக்கு இடையேயான மோதல் கர்நாடகா பா.ஜ.க-வுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. குறிப்பாக மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வை ஆட்சியில் இருந்து அகற்றியது.
கொலை செய்வதற்கான சதி உள்ளிட்ட அரசியல் சதி குற்றச்சாட்டுகள், அவதூறு வழக்குகள் போடப்போவதாக மிரட்டல் விடுப்பது என மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் பகவந்த் குபாவுக்கும், பிரபு சௌஹானுக்கும் இடையே கடும் வார்த்தைப் போரை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர்களது நீண்ட நாள் பகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் 4 முறை பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருந்த இவர்களது நீண்ட நாள் பகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது எல்லாமே ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கியது, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சரான சவுகான் - உள்ளூர் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னைக் கொலை செய்ய குபா தனது குண்டர்களிடம் கூறியதாக சவுகான் கூறினார். “அவரைத் தெருவில் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறினார். குபார் உங்களுடன் குண்டர்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னைக் கொல்லலாம். என்னைக் கொல்லலாம்” என்று சவுகான் தனது உரையில் குற்றம் சாட்டினார்.
சில நாட்களுக்குப் பிறகு வைரலான இந்த பேச்சு, வீடியோக்கள், மாநில பா.ஜ.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் பகவந்த் குபா தனது கட்சி எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குபா, “கடந்த வாரம், சவுகான் என்னை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டினார். பிற குற்றச்சாட்டுகளை கூறினார். நான் அதிர்ந்து போனேன். நானும், எனது குடும்பத்தினரும், நலம் விரும்பிகளும் பாதிக்கப்பட்டோம். நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்” என்று அவர் ஒரு கோவிலுக்கு வெளியே கூறினார். மேலும், எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிடுவதாகவும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார்.
முன்னதாக, பிதார் மாவட்டத்தில் வேறு யாரும் அரசியல் ரீதியாக வளருவதை சவுகான் விரும்பவில்லை என்ற புள்ளியில் இருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாக குபா கூறியிருந்தார்.
“ஆகஸ்ட் 9-ம் தேதி எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மாநில மற்றும் தேசிய தலைவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். கட்சி அனுமதித்தால் நான் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டுஅவதூறு வழக்கைத் தாக்கல் செய்வேன்” என்று இரண்டு முறை எம்.பி.யாக உள்ள குபா கூறினார். லம்பானி சமூகத்தைச் சேர்ந்த தலைவரான சவுகான், காங்கிரஸ் டூல் கிட்டால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். என்னை தோற்கடிப்பது கடினம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. எனவே, அவர்கள் எனக்கு எதிராக எங்களுடைய சொந்த மக்களைப் பயன்படுத்துகிறார்கள்.” என்று கூறினார்.
இதற்கு சவுகான் விரைவாக பதிலடி கொடுத்தார், குபாவின் கொலை சதி பற்றிய தனது குற்றச்சாட்டு உண்மை என்றும், இது குறித்து உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
அவுராத் தொகுதியில் அவர் என்னைத் தாக்க முயன்றார். காங்கிரஸுடன் எனக்கு புரிந்துணர்வு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளோம். என்னால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் நான் கட்சிக்கு எதிரானவன் என்று சொன்னால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. … நான் ரூ.200 கோடி (அவதூறு வழக்கு) தாக்கல் செய்வேன். சட்டம் அவருக்கு மட்டும்தானா, எனக்காக இல்லையா?” என்று சவுகான் ஆவேசமாகக் கூறினார்.
இந்த வார்த்தைப் போர் எல்லை மீறிச் செல்லும் என்று அஞ்சியதால் மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் என். ரவிக்குமார், இந்த விவகாரம் குறித்து கட்சி அறிந்திருப்பதாகவும், விரைவில் இரு தலைவர்களுடனும் சந்திப்பை நடத்துவதாகவும் கூறினார். “கட்சிக்கு இது தெரியும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வார்கள்” என்று ரவிக்குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
பாஜக வட்டாரங்கள் கூறுகையில், கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளாக இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையேயான பதற்றம் இருந்து வருகிறது. முக்கியமாக டெண்டர் வழங்குவது மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களால் இருந்து வருகிறது. குபாவின் உத்தரவின் பேரில் 2018 மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தல்களில் தன்னை தோற்கடிக்க முயற்சிகள் நடந்ததாக சவுகான் கடந்த காலத்தில் வாதிட்டார். அவுராத் தொகுதியின் 2023 சட்டமன்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ கண்ணீருடன் இருந்தார். குபா சுமார் 300 உள்ளூர் கட்சித் தொண்டர்களை காங்கிரஸில் சேருமாறு கூறியபோதும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.