எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், "மைக்கில் கத்தினால் மட்டும் அல்லாஹ்வால் கேட்க முடியுமா?" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பா கேட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
முஸ்லிம்கள் தினமும் மைக்ரோஃபோன் மூலம் அல்லாஹ்வின் பெயரை சொல்கிறார்கள், அப்படியானால், அல்லாஹ் காது கேளாதவரா? என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கேட்டது சர்ச்சையாகி உள்ளது.
பா.ஜ.க-வின் தற்போதைய விஜய் சங்கல்ப யாத்திரையில் ஈஸ்வரப்பா ஞாயிற்றுக்கிழமை பேசியபோது, ஆஸான் - பிரார்த்தனைக்கான இஸ்லாமிய அழைப்பு - பின்னணியில் கேட்கப்பட்டது. அதைக் கேட்ட ஷிவமோகா எம்.எல்.ஏ., எங்கு சென்றாலும் ஆஸான் தலைவலி என்று கூறினார். “உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ, இது (மைக்குகளில் ஆஸானை அழைக்கும் வழக்கம்) நிச்சயமாக முடிவுக்கு வரும்” என்று ஈஸ்வரப்பா பேசி கூட்டத்தில் கட்சியினரின் ஆரவாரத்தைப் பெற்றார்.
எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், "மைக்கில் கத்தினால் மட்டும் அல்லாஹ்வால் கேட்க முடியுமா?" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பினார்.
“நாங்களும் கோவில்களில் பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் ஸ்லோகங்களை உச்சரிக்கிறோம், பெண்கள் பஜனைப் பாடுகிறார்கள்… உலகம் முழுவதும், தர்மத்தைப் பாதுகாக்கும் ஒரே நாடு பாரத மாதா. ஆனால் அவர்கள் மைக் மூலம் சத்தமாக கத்த வேண்டும் என்றால், அவர் (அல்லாஹ்) காது கேளாதவர் என்று சொல்ல வேண்டும். (அஸான்) தேவையில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நான் கருதுகிறேன்” என்று கூறினார்.
இந்த அமைச்சர் முன்னர் தனது வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் பேச்சுகளுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கர்நாடகாவை உலுக்கிய ஹிஜாப் சர்ச்சையின் போது, ஈஸ்வரப்பா - அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் - வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கொடியாக மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவி கொடி மாற்றப்படும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஈஸ்வரப்பா தனது தொகுதியில் இந்து ஆர்வலர் ஒருவரின் கொலைக்கு ‘முஸ்லீம் குண்டர்கள்’ காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்து ஆர்வலரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவர் ஒரு ஊர்வலத்தை வழிநடத்தினார். மேலும், இந்த ஊர்வலத்தில் கலவரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தனது தற்கொலைக் குறிப்பில் பா.ஜ.க தலைவரின் பெயரைக் குறிப்பிட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரூ.4 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிலுவையில் உள்ள பில்களை வசூலிக்க ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதாக பாட்டீல் குற்றம்சாட்டினார். போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் அமைச்சர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"