கர்நாடக மாநிலம், சன்னகிரி தொகுதி எம்.எல்.ஏ கே. மடல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் தனது தந்தையின் கிரசண்ட் ரோடு அலுவலகத்தில் தனி நபரிடம் பணம் பெற்றபோது லோக்ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வியாழக்கிழமை மாலை தனது தந்தையின் அலுவலகத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோக்ஆயுக்தா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்தனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்திய சோதனையில், கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (பி.டபில்யூ.எஸ்.எஸ்.பி) தலைமைக் கணக்காளராகப் பணிபுரியும் வி பிரசாந்த் மடல், அவரது தந்தையும், சன்னகிரி பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான கே மடல் விரபாக்ஷப்பாவின் கிரசண்ட் ரோடு அலுவலகத்தில் தனி நபரிடம் பணம் பெற்றபோது லோக்ஆயுக்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் கேட்ட நபரால் வியாழக்கிழமை காலை பிரசாந்த் கைது செய்யப்பட்டதற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா காவல்துறை கூறுகையில், பிரசாந்தின் தந்தை கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (கே&எஸ்.டி.எல்) தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. உண்மையாக கொடுக்க வேண்டிய தொகை ரூ.81 லட்சமாக இருந்ததாகவும், அதில் ரூ.40 லட்சத்தை அந்த நபர் ஒப்படைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில், தலைமைக் கணக்காளராகப் பணிபுரியும் வி. பிரசாந்த் மடல், அவரது தந்தையும், சன்னகிரி பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான கே மடல் விருபக்ஷப்பாவின் கிரசண்ட் ரோடு அலுவலகத்தில் தனி நபரிடம் பணம் பெற்றபோது லோக்ஆயுக்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சோதனையில் பிரசாந்த் சிக்கினார். பா.ஜ.க எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்து ரூ.2.02 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய்நகரில் உள்ள டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்தின் வீட்டுக்கும் லோக்ஆயுக்தா போலீசார் சென்றனர். தொடர்ந்து வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.6.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.எஸ். பாட்டீல் வெள்ளிக்கிழமை கூறுகையில், “லஞ்சம் கொடுத்த மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த 3 பேர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.2.02 கோடி குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.6.10 கோடி ரூபாயும் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றும், இந்த நேரத்தில் மேலும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்காது என்றும் பாட்டீல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“