Advertisment

Karnataka bypoll results : கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா : சித்தராமையா ராஜினாமா

Karnataka Bye-Election Results 2019 : கர்நாடக சட்டசபையில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்திகளை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka, karnataka bypoll live updates, karnataka by polls result, karnataka bypolls results, karnataka byelection result

Karnataka, karnataka bypoll live updates, karnataka by polls result, karnataka bypolls results, karnataka byelection result

Karnataka Assembly Bypoll Results 2019 : கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 12 ல் பா.ஜ. வென்றுள்ளது. இதையடுத்து கவிழும் ஆபத்திலிருந்து முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது; பா.ஜ. சட்டசபையில் முழு பெரும்பான்மை பெற்றுள்ளது.

Advertisment

கர்நாடகாவில் 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக காங்கிரசின் 14 எம்.எல்.ஏ.க்களும் ம.ஜ.த.வின் மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஜூலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். பின் முதல்வர் எடியூரப்பா லைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்தது. இந்நிலையில் சபாநாயகர் முடிவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட அனுமதித்தது. இதையடுத்து மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய இரு தொகுதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு இம்மாதம் 5ல் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்நிலையில் 15 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜ. - 12 தொகுதிகளிலும் காங். இரு தொகுதிகளிலும் சுயேச்சை ஒரு தொகுதியிலும் வென்றன. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோல்வியடைய செய்வதே எங்கள் குறிக்கோள் எனக்கூறி போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதாதளம் படுதோல்வியடைந்தது.

சித்தராமையா ராஜினாமா : இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக சட்டசபை காங். குழு தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார். இதே போல அக்கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து தினேஷ் குண்டுராவும் நேற்று ராஜினாமா செய்தார்.

Live Blog

Karnataka Bye-Election Results 2019 : கர்நாடக சட்டசபையில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்திகளை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்



























Highlights

    16:21 (IST)09 Dec 2019

    சித்தராமையா ராஜினாமா

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை, முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    15:12 (IST)09 Dec 2019

    மகாலெட்சுமி லேஅவுட் சட்டசபை தொகுதி : பா.ஜ. வெற்றி

    மகாலெட்சுமி லேஅவுட் சட்டசபை தொகுதியில்,  பா.ஜ. வேட்பாளர் கோபாலய்யா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜூவைவிட, 54,386 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    15:02 (IST)09 Dec 2019

    மாண்டியா பகுதியில் பா.ஜ.,வுக்கு கிடைத்தது முதல் வெற்றி

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி இதுவரை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாண்டியா பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணரானபேட்ட தொகுதியில் பா.ஜ. கட்சி முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது. மாண்டியா பகுதியில் ஒக்கலிக்கர்கள் அதிகமாக வாழும் பகுதியில் முதன்முறையாக பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நாராயண் கவுடா , தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் தேவராஜை விட 9,731 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    14:57 (IST)09 Dec 2019

    ஹனசூரு தொகுதி : காங்கிரஸ் வெற்றி

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹனசூரு தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் மஞ்சுநாத்தைவிட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் 39,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    13:58 (IST)09 Dec 2019

    பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்

    கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து தலைநகர் பெங்களூருவில், அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகளில் பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    12:57 (IST)09 Dec 2019

    பா.ஜ., 1 இடத்தில் வெற்றி ; 11 இடங்களில் முன்னிலை

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி எல்லாபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.  

    அதானி, கக்வாட், கோகாக், எல்லாபூர், ஹிரேகெருர்,ராணிபென்னுர், விஜயநகரம், சிக்கபல்லாபூர், மகாலட்சுமி லேஅவுட், கே ஆர் புரா உள்ளிட்ட 11 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    சிவாஜிநகர் மற்றும் ஹனசூரு தொகுதிகளில் காங்கிரசும், ஹோசகோட் சட்டசபை தொகுதியில் சுயேட்சையும் முன்னிலையில் உள்ளனர்.

    11:31 (IST)09 Dec 2019

    எடியூரப்பாவுக்கு பா.ஜ. எம்.பி. தேஜஸ்வி சூர்யா வாழ்த்து

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருப்பதன் மூலம், கர்நாடகாவில் மீண்டும் நிலையான ஆட்சி ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனில் இந்த அரசு அக்கறை செலுத்தும் என்றும், முதல்வர் எடியூரப்பாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பா.ஜ. எம்.பி. தேஜஸ்வி சூர்யா, டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    11:13 (IST)09 Dec 2019

    தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் - காங்கிரஸ்

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.  மக்கள், தேசதுரோகம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த தோல்வியின் மூலம், தாங்கள் ஒன்றும் துவண்டுவிடவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    10:55 (IST)09 Dec 2019

    எல்லாபூர் சட்டசபை தொகுதி - பா.ஜ., வெற்றி

    எல்லாபூர் சட்டசபை தொகுதியில் பா.ஜ, வேட்பாளர் சிவராம், காங்கிரஸ் வேட்பாளர் பீமண்ணா நாயக்கைவிட 21,667 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். சிவராம் வெற்றி பெற்றதாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    10:33 (IST)09 Dec 2019

    ஹோசகோட் சட்டசபை தொகுதி - சுயேட்சை முன்னிலை

    ஹோசகோட் சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நாகராஜூவைவிட, சுயேட்சை வேட்பாளர் சரத் குமார் பச்சேகவுடா 3.879 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.  நாகராஜூ, நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ என்ற பெருமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    10:30 (IST)09 Dec 2019

    மகாலெட்சுமி லேஅவுட் சட்டசபை தொகுதி : பா.ஜ. வெற்றிமுகம்

    மகாலெட்சுமி லேஅவுட் சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் கோபாலய்யா, காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜூவை விட 11,500 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    10:04 (IST)09 Dec 2019

    கோயில்களை நோக்கி படையெடுக்கும் எடியூரப்பா, தேவகவுடா

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், முதல்வர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர் தேவகவுடா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கோயில், கோயிலாக படையெடுக்க துவங்கியுள்ளனர்.

    publive-image

    publive-image

    09:51 (IST)09 Dec 2019

    பாரதிய ஜனதா 9 ; காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா 2 இடங்களில் முன்னிலை

    கர்நாடக இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா 9 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதானி, கக்வாட், கோகாக், எல்லாபூர், ஹிரேகெருர்,ராணிபென்னுர், விஜயநகரம், சிக்கபல்லாபூர், மகாலட்சுமி உள்ளிட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிவாஜிநகர், ஹனசூரு தொகுதிகளில் காங்கிரசும், கிருஷ்ணரானபீடே மற்றும் யேஷ்வந்திரபுரா தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது.

    09:46 (IST)09 Dec 2019

    எடியூரப்பா அரசு தப்புமா?

    224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். டிசம்பர் 5ம் தேதி, 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மாஸ்கி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை. முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு சுயேட்சை உட்பட 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி வசம் 101 எம்எல்ஏக்கள் உள்ளனர். பா.ஜ., சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவை. இந்த 17 எம்எல்ஏக்களில் இருந்து 6 எம்எல்ஏக்கள் எப்படியும் பா.ஜ., பெற்றுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Karnataka Bye-Election Results 2019 : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. தற்போது பா.ஜ.,விடம் 105 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏ.,க்கள் தேவை.
    Karnataka
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment