கர்நாடகா இடைத்தேர்தல் 2018 : கர்நாடகா மாநிலத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறகிறது.
கர்நாடகாவில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளனர். இந்த 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கர்நாடகா இடைத்தேர்தல் 2018 Live Updates:
4. 00 PM : மாலை நிலவரப்படி 47 சதவீதம் வாக்குப்பதிவு.
3. 00 PM : மதிய நிலவரப்படி இதுவரை 35 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. 00 PM : முதலமைச்சர் எடியூரப்பா ஷிமோகாவில் உள்ள குச்சாரியா கோவிலுக்கு சென்று தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷிமோகா தொகுதியில் தனது மகன் ராகவேந்திரா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
1. 00 PM :3 முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றன. ஷிமோகா தொகுதியில் போட்டியிடும் என் மகன் ஜெயிப்பது உறுதி ”என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
12. 30 PM : மனைவி அனிதாவுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்த முதல்வர் குமாரசாமி
/tamil-ie/media/media_files/uploads/2018/11/1.jpeg)
12. 00 PM : குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
11. 30 AM : கர்நாடகா இடைத்தேர்தலில், 179 ஆவ்து வாக்குச்சாவடியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11. 15 AM : 2 தேர்தலில் வாக்களிக்காத நடிகை ரம்யா இன்றாவது மண்டியாவுக்கு வந்து ஓட்டுப்போடுமாறு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரம்யா கோபம் அடைந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/h8.jpg)
10. 50 AM : ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, எடியூரப்பா, ஜே.ஹெச். படேல் ஆகியோரின் மகன்கள் மது பங்காரப்பா (மஜத), ராகவேந்திரா (பாஜக), மது படேல் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். 3 முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் ஷிமோகாவில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
10. 30 AM : பாஜக சார்பில் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார்.
எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா
10. 00 AM: ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக, மாற்றுத் திறனாளிகளை வீட்டிலிருந்து ஓட்டுச்சாவடிகளுக்கு அழைத்து வரும் முயற்சியை, கர்நாடக இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷன் அமல்படுத்தியுள்ளது.
9. 30 AM: ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுகிறார்.
குமாரசாமி மனைவி
9. 00 AM: காலை 7 மணி முதல் பரபரப்பான வாக்குபதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸூம், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
பாஜக சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மண்டியா உள்பட 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.