scorecardresearch

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி!

காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்
கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவின் 3 நாடளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று (6.11.18) காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி. மேலும் பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு கண்டது.

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி யாருக்கு?

கர்நாடகா மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகள், ராம்நகரா, ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஒரு அணியும், பாஜகவும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், காலியாக உள்ள இந்த ஐந்து தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை (3.11.18) தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

மொத்தம் 5 இடங்களில் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையில் 1248 வாக்கு எண்ணும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் முழு நிலவரம்:

மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரைவிட 3,24,943 வாக்குகளை கூடுதலாக பெற்று மஜத வேட்பாளர் ஷிவராமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.

ஜமாகாந்தி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி.  பாஜக வேட்பாளரைவிட 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.

ஷிமோகா மக்களவை தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என கர்நாடக பாஜக தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.

ராமநகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்திரசேகரை 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் மஜத வேட்பாளர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார்.

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka bypolls results