scorecardresearch

Karnataka Floor Test HD Kumaraswamy: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

Karnataka Floor Test Live Updates: HD Kumaraswamy Trust Vote:  குமாரசாமி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு. சட்டசபைக்கு புறப்பட்டு சென்றார்.

kumaraswamy
kumaraswamy

Karnataka Floor Test Live Updates: HD Kumaraswamy Trust Vote:  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

Karnataka Floor Test LIVE UPDATES: கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2018 முடிவுகள் அறிவிப்பின் பிறகு பல திருப்பங்களை சந்தித்துள்ளது கர்நாடக மாநிலம். கடந்த 10 நாட்களாக நடைபெற்ற வந்த சம்பவங்களை தொடர்ந்து புதிதாக முதல்வர் பதவியேற்றுள்ள குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க உள்ளார்.

கர்நாடக சட்டசபையில், 112 இடங்களில் பெரும்பான்மையை நீருபிக்கும் தலைவர் மாநில முதல்வர் ஆவார் என்று கர்நாடக மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா தெரிவித்திருந்தார். இதற்காக முதலில் அழைப்பு விடுக்கப்பட்டு, பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு பாஜக எடியூரப்பாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் தன்னிடம் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இந்நிலையில் மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு பிறகு மஜத-வை சேர்ந்த குமாரசாமி, முதல்வர் பதவியேற்றார்.

இன்று கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தனது நம்பிக்கை வாக்கெடுப்பை நிரூபித்து வருகிறார்.

Karnataka Floor Test Live Updates: HD Kumaraswamy Trust vote: சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மதியம் 3.48: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி. 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் குமாரசாமி.

மதியம் 3.37: வெளிநடப்பு செய்வதற்கு முன் எடியூரப்பா, ‘குமாரசாமி அரசு விவசாயிகள் கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மே 28ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.’ என்று தெரிவித்தார்.

மதியம் 3.33: குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு. எடியூரப்பா உட்பட பாஜக-வினர் வெளிநடப்பு. எதிர்க்கட்சித் தலைவரானார் எடியூரப்பா.

மதியம் 2.30 : சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.

மதியம் 12.34: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மதியம் 12.27: கர்நாடக சட்டசபை சபாநாயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதியம் 12.20: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. வாக்கெடுப்பில் பங்கேற்க சித்தராமையா மற்றும் எடியூரப்பா வந்தடைந்தனர்.

மதியம் 12.10: காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் மூத்த தலைவர் சிவகுமார் மற்றும் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் பங்கேற்பு.

காலை 11.50: காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் விதான் சௌதாவில் நடைபெற்று வருகிறது.

காலை 11.11 : குமாரசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க விதான் சௌதாவை வந்தடைந்தனர்.

காலை 11.01 : மஜத-காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இன்று மதியம் 12.15 மணிக்கு நிரூபிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலை 9.30: சட்டசபைக்கு புறப்பட்டார் முதல்வர் குமாரசாமி. அப்போது ‘சட்டசபை வாக்கெடுப்பில் இன்று நிச்சயம் நான் தான் வெற்றிபெறுவேன். அதில் சந்தேகம் இல்லை’ என்று அவர் கூறினார்.

kumaraswamy byte
சட்டசபைக்கு புறப்பட்டார் முதல்வர் குமாரசாமி

காலை 9.06: ‘கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் குமாரசாமி நீடிப்பாரா என்பது குறித்து மஜத-காங்கிரஸ் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று துணை முதல்வராகப் பதவி வகித்துள்ள ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

Karnataka swearing-in ceremony

காலை 8.35 : கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதால் அவர் இன்று சட்டசபையில் மிக எளிமையாகத் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka cm kumaraswamy floor test live updates jds congress bjp speaker yeddyurappa