Cauvery Water To Tamil Nadu | காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி அண்டை மாநிலமான தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 8,000 கனஅடி நீரை இந்த மாத இறுதி வரை திறந்துவிட கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14, 2024) தெரிவித்தார்.
மேலும், “காவிரி படுகையில் உள்ள அணைகளில் 63 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது, இந்த நிலையில், தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாத நிலை காணப்படுகிறது” என்றும் சித்த ராமையா கூறினார்.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ஜே.டி.எஸ்., எம்.எல்.ஏ., ஜி.டி.தேவே கவுடா, விவசாயத் தலைவர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேசிய சித்த ராமையா, “11,500 கன அடி தண்ணீர் ஒரு டிஎம்சி விடாமல் 8,000 கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் திறப்பை குறைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“