குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ வேலைகளில் கன்னடர்களை மட்டுமே அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் பணியமர்த்துவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, தொடர்பாக சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட தனது பதிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை நீக்கியுள்ளார்.
சித்தராமையா தனது பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் “சி மற்றும் டி” கிரேடு பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை கட்டாயம் பணியமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட மண்ணில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, சொந்த மண்ணில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்களின் முன்னுரிமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை தலைவர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில், தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட், உள்நாட்டில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார். “நிர்வாகத்தில் (நிர்வாக பதவிகளில்), 50% பேருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகமற்ற பதவிகளில், 70% பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திறமை இல்லை என்றால், ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து அவர்களுக்கு இங்கு வேலை கொடுக்கலாம். ஆனால், உள்நாட்டில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது,” என்று அமைச்சர்
சந்தோஷ் லாட் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ (ANI) இடம் கூறினார்.
கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல், அரசாங்கம் "பரந்த ஆலோசனைகளை" நடத்தும் என்றார். "தொழில்துறையின் நலன்களுடன் கன்னடர்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அமைச்சர் பாட்டீல் கூறினார்.
“கர்நாடகம் ஒரு முற்போக்கான மாநிலம், நூற்றாண்டிற்கு ஒருமுறை நடக்கும் தொழில்மயமாக்கல் போட்டியில் நாம் எதையும் இழக்க முடியாது. அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம். தொழில்துறையினர் எந்த அச்சமும் அல்லது கவலையும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் உறுதியாக இருக்க முடியும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பாட்டீல் கூறினார்.
இதற்கிடையில், கர்நாடக எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, இந்த மசோதாவை கொண்டு வந்த தொழிலாளர் துறை, "தொழில்துறை, தொழில்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இன்னும் கலந்தாலோசிக்கவில்லை" என்றார்.
"மசோதாவின் விதிகளை கொண்டு வருவதற்கு முன், அவர்கள் அந்தந்த அமைச்சகங்களுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் முக்கியமாக, தொழில்துறையினருடன் ஒரு பரந்த ஆலோசனை இருக்கும். எனவே பீதி அடையத் தேவையில்லை. நாங்கள் மாநிலத்திற்கான வேலைகளைப் பாதுகாப்பதோடு, அவர்களின் ஆலோசனையுடன் தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்கப் போகிறோம்,” என்று பிரியங்க் கார்கே கூறினார்.
திங்களன்று, கர்நாடக அமைச்சரவை, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களில் 50 சதவீதம் பேர் நிர்வாகப் பிரிவுகளிலும், 75 சதவீதம் பேர் மேலாண்மை அல்லாத பிரிவுகளிலும் நியமிக்கப்பட வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
‘வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும்’: மசோதாவுக்கு தொழில் அதிபர்கள் எதிர்ப்பு
மசோதாவை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக ஒத்த உணர்வுகளை எதிரொலித்தன, இது ஒதுக்கீட்டின் கீழ் வராத திறமையான தொழிலாளர்களை விரட்டுவதன் மூலம் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் முடிவு என்று விவரித்தனர்.
இந்தியாவின் தொழில்நுட்பத் துறையின் உச்ச அமைப்பான நாஸ்காம் ஒரு அறிக்கையில், இந்த மசோதா "ஆழ்ந்த கவலையளிக்கிறது" என்று கூறியது.
இந்த மசோதா, "நிறுவனங்களை விரட்டும், மற்றும் ஸ்டார்ட்அப்களை முடக்கும்" என்று நாஸ்காம் கூறியது. இது போதுமான திறமையான உள்ளூர் மக்கள் இல்லாத நிலையில் நிறுவனங்களை இடமாற்றம் செய்யும் என்று நாஸ்காம் கூறியது.
"தொழில்துறையின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் மாநிலத்திற்கான உலகளாவிய முத்திரையை பாதிக்கக்கூடிய இந்த வகையான மசோதாவைப் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது", என்று கூறிய நாஸ்காம் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இன்ஃபோசிஸின் முன்னாள் சி.எஃப்.ஓ (CFO) மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினருமான மோகன்தாஸ் பாய், முதலீடுகளை விரட்டுவதற்குப் பதிலாக கன்னட இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். "கர்நாடகா இந்தியாவின் சிறந்த மாநிலம், இதை நாம் அழிக்கக்கூடாது" என்று மோகன்தாஸ் பாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மோகன்தாஸ் பாய் இந்த மசோதாவை "பாரபட்சமானது, பிற்போக்குத்தனமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று குறிப்பிட்டார், அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸை இந்த முடிவுக்காக விமர்சித்தார்.
“தொழில்நுட்ப மையமாக, எங்களுக்கு திறமையான திறமைகள் தேவை, உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே நோக்கமாக இருக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை நாம் பாதிக்கக் கூடாது. இந்த பாலிசியில் இருந்து மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்கும் எச்சரிக்கைகள் இருக்க வேண்டும்,” என்று பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமான பயோகான் லிமிடெட்டின் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.