காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம், ரயில் மற்றும் சாலை மறியலில் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், “காவிர மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் கொடுக்கும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்து விடக் கூடாது.
காவிரி நீர் பங்கீட்டிற்காக ஒரு ஸ்கீமை ஏற்படுத்த வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் கூறியது. ஸ்கீம் என்றால் ஒரு திட்டம் அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை. எனவே, நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என்றும் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Karnataka cm siddaramaiah writes letter to modi for not form cauvery management board