Karnataka college makes students wear cartons during exam to prevent cheating - தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க உலக லெவல் அட்டெம்ப்ட்! டென்ஷனான அமைச்சர் (வீடியோ)
தேர்வு எழுதும் போது, மாணவ மாணவிகள் காப்பி அடிப்பதைத் தடுக்க பல்வேறு கெடுபிடிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்படியொரு உலக மகா திட்டத்தை, யோசனையை, சிந்தனையை, தத்துவத்தை, அறிவியலை, விஞ்ஞானத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம்.
Advertisment
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பகத் பி.யூ. கல்லூரியில் நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. அப்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்டது. அந்த வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதுவதற்கு வசதியாக அட்டைப்பெட்டியில் இரு துளைகள் இடப்பட்டு இருந்தது. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதினர்.
இந்த அரிய நிகழ்வு ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது. இதுகுறித்து அந்த தனியார் கல்லூரி நிர்வாகம் கூறுகையில், தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க இது ஒரு நூதன முயற்சியாகும். சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது வெற்றி பெற்றால், இந்த முறையை அனைத்து தேர்வுகளிலும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது.
Advertisment
Advertisements
This is totally unacceptable. Nobody has any right to treat anybody more so students like animals. This pervertion will be dealt with aptly. https://t.co/y69J0XcTA6
— S.Suresh Kumar, Minister - Govt of Karnataka (@nimmasuresh)
— S.Suresh Kumar, Minister - Govt of Karnataka (@nimmasuresh) October 18, 2019
18, 2019
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் இந்த முயற்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போல் நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்த தவறான செயல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அக்கல்லூரி முதல்வர் எம்.பி. சதீஷ், பீகாரில் ஒரு கல்லூரி எடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கோளிட்டு இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார். "நாங்கள் இந்த நடவடிக்கைகளை ஒரு பீகார் கல்லூரியின் அடிப்படையில் தொடங்கினோம், அக்கல்லூரியின் நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டன."
"எங்கள் நடவடிக்கைகள் மாணவர்களின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் இவ்விவகாரத்தால் திசை திருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஒரு பரிசோதனையாக இம்முயற்சி எடுக்கப்பட்டது. எங்களுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news