காங்கிரஸ் கட்சி தனது கர்நாடக தேர்தல் அறிக்கையில் மொத்த இடஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 69% இட ஒதுக்கீட்டை தாண்டும்.
உச்ச நீதிமன்றத்தால் இடஒதுக்கீட்டிற்கு நிர்ணயித்த 50% உச்ச வரம்பை மீறுவது எளிதான காரியம் அல்ல. ஏனெனில், சமீபத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டை அதிகரித்த பிற மாநிலங்கள் தங்கள் சட்டங்களை வெவ்வேறு நிலைகளில் அடைத்து வைத்திருக்கின்றன.
இருப்பினும், நவம்பர் 2022-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மத்திய அரசின் 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், 50% உச்சவரம்பு தளர்த்த முடியாதது என்று பரிந்துரைத்து ஒரு பார்வையைத் திறந்தது.
சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்கள், தங்கள் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்த முயற்சித்துள்ளன. இது நீதித்துறை மறுஆய்வுக்கு வரும்போது அவைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கும். அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பெரும்பாலான சட்டங்கள் விவசாயம் / நிலப் பிரச்சினைகளைப் பற்றியது.
கர்நாடகாவிலேயே, முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து, மாநிலத்தின் இரு ஆதிக்க சமூகங்களான லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற தற்போதைய மாநில பா.ஜ.க அரசின் தேர்தலுக்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை வந்துள்ளது..
முன்னதாக, 2021-ல், உச்ச நீதிமன்றம் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறியதற்காக, மராத்தா ஒதுக்கீட்டை வழங்கும் மகாராஷ்டிர அரசின் சட்டத்தை ரத்து செய்தது.
தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீடு சமூக நீதியின் நீண்ட வரலாற்றின் பின்னணியில் வந்தது. தற்போது, இது பட்டியல் இனத்தவருக்கு (எஸ்சி) 18%, பழங்குடியினருக்கு (எஸ்டி) 1%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி) 20% மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி) 30% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி எஸ்சி, மற்றும் எஸ்டி மக்களுகு 16% இட ஒதுக்கீடு மட்டும் இருந்தது.
1971-ம் ஆண்டில், மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு ஓ.பி.சி இடஒதுக்கீட்டை 30% ஆகவும், எஸ்சி-க்கு 18% ஆகவும் எஸ்டி-க்கு 1% இடஒதுக்கிடு ஒதுக்கப்பட்டது. 1989-90ல், மீண்டும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தி.மு.க அரசு, எம்.பி.சி பிரிவினருக்கு பிரத்யேகமாக 20% இடஒதுக்கீடு தனியாக அளிக்கப்பட்டது. மாநில அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் தற்போது 30% பிசி-களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
1980-களின் பிற்பகுதியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போராட்டத்திற்குப் பிறகு எம்.பி.சி மற்றும் பிசி-களை பிரிக்க கருணாநிதி முடிவு செய்தார். 1970-களில் இருந்து, எம்.ஜிஆர் ஆட்சியில் ஏ.என். சட்டநாதன் கமிஷன் (1971) மற்றும் ஜே.ஏ. அம்பாசங்கர் கமிஷன் (1982) உட்பட இதை உறுதிப்படுத்திய ஆணையங்கள் இருந்தன.
உச்ச நீதிமன்றத்தின் 1992-ம் ஆண்டு 50% உச்சவரம்பு நிர்ணயித்த தீர்ப்பிற்குப் பிறகு, தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத் தடைகளை எதிர்கொண்டபோது, அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதா, பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன், டெல்லிக்கு ஒரு தூதுக்குழுவை அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவைச் சந்திக்கச் சென்றார். இதையடுத்து, தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு விதி ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீடு குறித்த விவாதம் தமிழகத்தில் கூட தீர்க்கப்படவில்லை. 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் ஓ.பி.சி பிரிவில் உள்ள அதாவது எம்.பி.சி பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, தேன்கூட்டைக் களைத்து பரபரப்பை கிளப்பியதில் ஆச்சரியமில்லை. வன்னியர்களை அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், தேவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற பிற ஓ.பி.சி சாதியினர் வன்னியர்களுக்கு ஒதுக்கீட்டு சலுகை வழங்கும் நடவடிக்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், இருவருமே தங்களது சொந்த சமூக வாக்கு வங்கிகளில் இருந்து பின்னடைவை சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமியின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் வரை மட்டுமே நீடிக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பல்வேறு குழுக்களின் பலம் குறித்த கேள்விகளுக்கு தீர்வு காணும் வரை வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்செயலாக, 2021-ம் ஆண்டில், அ.தி.மு.க அரசு சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் குறித்த அளவீட்டுத் தரவுகளைச் சேகரிக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் ஒரு ஆணையத்தை அமைத்தது. அதற்கு ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஏ குலசேகரனை தலைவராக நியமித்தது. இந்த குழு இன்னும் தனது பணியை முடிக்கவில்லை.
அ.தி.மு.க 2021 தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியிலிருந்து வெளியேறியது. அதே நேரத்தில் வன்னியர் இடஒதுக்கீடு நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை. நவம்பர் 2021-ல், நீதிமன்றம் இந்த முடிவை இந்திய அரசியலமைப்பின் தீவிர பிரச்னை என்று ரத்து செய்தது.
2024 தேர்தல் நெருங்குகிறது. இப்போது ஆட்சியில் இருப்பது தி.மு.க தான். மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க் குரல் எழுப்பி வருபவர்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணி நியமனங்களிலும் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், பாதுகாக்கவும் திமுக அரசு உறுதி பூண்டுள்ளதாக சமீபத்திய கொள்கை விளக்கக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டது.
வெவ்வேறு அரசாங்கங்கள் தங்களின் சாதிய வாதங்களை உறுதியான தரவுகளை அடிப்படையாகக் கொள்ளாமல், முக்கியமான முடிவுகளை எடுத்ததில் ஆச்சரியமில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறுகையில், இந்த செயல்முறை சிக்கலானது மற்றும் உறுதியானது. ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அதிக பங்கை எதிர்பார்ப்பவர்களிடம் இருந்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உரிமை கோருபவர்களிடம் இருந்தும் எதிர்ப்புகளை ஏற்படுத்தும்.” என்று கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் 75% இடஒதுக்கீடு வாக்குறுதி குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், “75% இடஒதுக்கீடு ஒன்றும் சட்டவிரோதமானது அல்ல. ஆனால், அங்கே இந்த எண்ணிக்கையில் இடஒதுக்கீடு கொண்டுவருவதற்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை.” என்று கூறுகிறார்.
சக்தி வாய்ந்த மட கலாச்சாரம் மற்றும் இரண்டு ஆதிக்க சாதிகளான லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் இருப்பதால் கர்நாடகாவின் வழக்கு மேலும் சிக்கலானது. தமிழக அரசியல் நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் சிக்கல் குறைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“