ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) இயக்குநராக 2 ஆண்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட தேர்வுக் குழுவால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
பிரவீன் சூட், 1986-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர், 1985-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆஷித் மோகன் பிரசாத்தை அடுத்து, ஜனவரி 2020-ல் கர்நாடக டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.
பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் (தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் நிலா மோகனன் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில் கூறியிருப்பதாவது: “சி.பி.ஐ இயக்குநராக, அலுவலக துணைப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால், அவரது பதவிக்காலம் முடிந்ததும், தகுதியான அதிகாரியின் ஒப்புதல் குழு, பிரவீன் சூட், 1986-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீன் சூட் டெல்லி ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்றவர். காவல்துறையில் சேர்ந்த பிறகு, 1989-ம் ஆண்டு மைசூர் துணைக் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் எஸ்.பி-யாகப் பணியாற்றினார். பின்னர், அவர் பெங்களூரு நகருக்கு காவல்துறை துணை ஆணையராக (சட்டம் ஒழுங்கு) மாற்றப்பட்டார். 1999-ம் ஆண்டில், அவர் மொரிஷியஸ் அரசாங்கத்தின் போலீஸ் ஆலோசகராக வெளிநாட்டு பிரதிநிதியாக மூன்று ஆண்டுகள் சென்றார். அங்கு அவர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க போலீசாருடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.
பிரவீன் சூட் பற்றி ஒரு வலைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிரவீன் சூட் 2003-ம் ஆண்டில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூர் மற்றும் மேக்ஸ்வெல் ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸ், நியூயார்க்கில் உள்ள சிராகுஸ் பல்கலைக்கழகத்தில் அரசு கொள்கை மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் படிப்பதற்காக ஓய்வு எடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பிரவீன் சூட் 2004 முதல் 2007 வரை மைசூர் நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மைசூரில் அவர் பணிபுரிந்தபோது பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகளை கைது செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தார். 1996-ல் சிறந்த சேவைக்காக முதலமைச்சரின் தங்கப் பதக்கமும், 2002-ல் சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கமும், 2011-ல் சிறப்பான சேவைக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கமும் பெற்றுள்ளார். மேலும், 2006-ல் பிரின்ஸ் மைக்கேல் சர்வதேச சாலை பாதுகாப்பு விருதையும் பெற்றுள்ளார். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கான பங்களிப்பு மற்றும் 2011-ம் ஆண்டில் ‘போக்குவரத்து மேலாண்மைக்கான தொழில்நுட்பத்தை மிகவும் புதுமையான பயன்பாட்டிற்காக’ தேசிய மின்-ஆளுமை தங்க விருது” என்று பிரவீன் சூட்டின் வலைப்பதிவு தெரிவிக்கிறது.
இவர் உள்துறை முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார்; கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், நிர்வாகம் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார்.
பெங்களூரு நகரின் காவல்துறை ஆணையராக, அவர் ‘நம்ம 100’ – துயரத்தில் உள்ள குடிமக்களுக்காக ஒரு ‘அவசரகால நடவடிக்கை அமைப்பு’ தொடங்கினார். இது பன்மொழி தொடர்பு அலுவலர்கள் உடன் 24 மணி நேரமும் நிர்வகிக்கும் அவசர எண் 100 அழைப்பை வழங்குகிறது. மேலும், பெங்களூரு நகரம் முழுவதும் பரவியுள்ள 276 அவசரகால நடவடிக்கை வாகனங்களின் (ஹொய்சாலா) உதவியையும் வழங்குகிறது.
பெண் காவலர்களால் நிர்வகிக்கப்படும் ‘சுரக்ஷா’ செயலி மற்றும் ‘பிங்க் ஹொய்சாலா’ ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, பெண்கள் மற்றும் துன்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக உதவுவதற்காக முக்கியப் பங்காற்றினார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு மூன்று பெயர்களை சனிக்கிழமை பட்டியலிட்டது. ஆனால், குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் – மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி – இந்த நடைமுறைக்கு தனது ஆட்சேபனையை தெரிவித்ததால், பயிற்சி சுமூகமாக இல்லை. மேலும், இந்த செயல்முறையை புதிதாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரவையின் நியமனக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலிடப்பட்ட பெயர்கள்: பிரவீன் சூட், டி.ஜி.பி (கர்நாடகா); சுதிர் குமார் சக்சேனா, டி.ஜி.பி, மத்திய பிரதேசம்; தாஜ் ஹாசன், இயக்குநர் ஜெனரல், தீயணைப்பு சேவை, குடிமைத் தற்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“