/tamil-ie/media/media_files/uploads/2020/12/dharme-gowda-tamil-news.jpg)
karnataka dharme gowda death tamil news: கர்நாடக சட்ட மேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் சிக்மகளூரு அருகேயுள்ள கடூரில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது. அவர் மர்மமாக இறந்திருப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா சட்ட மேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா. இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். கடந்த 15ஆம் தேதி கர்நாடக மேலவைக் கூட்டத்தில் சபாநாயகர் இருக்கையில் தர்மே கவுடா அமர்ந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர், அந்த
இருக்கையில் அமர மறுத்துவிட்டதால் தர்மே கவுடா அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ரகளையின்போது தர்மே கவுடாவை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தினர். இந்தச் சூழலில்தான் சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் தர்மே கவுடா சடலம் கிடந்தது. சடலத்துடன் கடிதம் ஒன்றை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.