சொன்னதை செய்து காட்டியது பாஜக: தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக கர்நாடகாவில் வெற்றி!

Karnataka Assembly Election Results 2018: கர்நாடக தேர்தலை பொருத்தவரையில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி

“Karnataka Assembly Election Results 2018:  கர்நாடக  சட்டப்பேரவை தேர்தலில்  பாஜக  வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. நாடு முழுவக்தும் பாஜவின்  ஆதரவாளர்கள்  வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று,  ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.   காங்கிரஸ் கட்சியை  பொருத்தவரையில்  பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதியில் குறைவான வாக்குகளை பெற்று  தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல இடங்களில் பிஜேபியின் வெற்றி  பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.  இருப்பினும் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட குஜராத் முதல்வர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால்  கர்நாடகாவில் பிஜேபியல் எதிர்க்கட்சி என்று இடத்தைக் கூட பெற முடியவில்லை.

ஆனால்,  2018  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி  பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, தனது சாம்ராஜ்ஜியத்தை  கொஞ்சம் கொஞ்சமாக நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக கர்நாடக தேர்தலை பொருத்தவரையில்  பிஜேபி வெற்றி பெறுவது உறுதி என்று பிரச்சாரத்தைல் ஈடுப்பட்ட போதே மோடி  பெருமிதம் கொண்டார்.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை எந்த பிரதமரும் மோடியைப் போல அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தது இல்லை. தற்போது  கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன.  இப்படி தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்  எவருமே நினைக்கவில்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது பொய்யாகியுள்ளனர்.

கர்நாடகாவில் இந்த வெற்றி தென்னிந்தியாவில் பிஜேபிக்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது என்று  பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  இந்நிலையில்,  நாடு முழுவதும் உள்ள  பிஜேபினர்  கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் ஒருபக்கம் வெற்றியை கொண்டாடு வருகின்றனர்

×Close
×Close