கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்து காட்டுவது உறுதி: பிஜேபியின் வாக்குறுதிகள் ஒரு ரீக்கேப்!!

Karnataka Assembly Election Results 2018: பிஜேபி வாக்குறுதிகள்

By: Updated: May 15, 2018, 11:08:20 AM

“Karnataka Assembly Election Results 2018:”  கர்நாடக  சட்டசபை  தேர்தலில் பாஜக  வெற்றி பெற்றால் இதையெல்லாம் நாங்கள் செய்து காட்டுவது உறுதி என்று  பிரச்சாரத்தில் பிஜேபி வழங்கிய வாக்குறுதிகள் என்னவெல்லாம் என்பதை ஒரு ரீக்கேப் மூலம்  பார்க்கலாம்.

பிரதமர்  தேர்தலில்   தொடங்கி நடந்து முடிந்த  குஜராத்  தேர்தலை வரை  பிஜேபி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது  அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள்.   விவசாயக்கடன் அனைத்தும்  தள்ளுபடி, தனி நபர் வங்கிக் கணக்கில் 15 லட்சம்,  பிரதமர் சொந்த  வீடு  கட்டும் திட்டம் என  மக்களை கவர்ந்த கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகள் பல.

இந்த திட்டங்கள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்றால் அதற்கு பல காரணங்கள் பிஜேபியிடம் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில்,  கர்நாடக சட்டப்பேரவை  2018  தேர்தலில் பாஜக வெற்றி  பெறுவது தற்போது நிலவரப்படி உறுதியாகியுள்ளது. அங்கும் பிரச்சாரத்தின் போது பாஜக சார்பில்  பல வாக்குறுதிகள்  அள்ளி வீசப்பட்டுள்ளன.  அவையெல்லாம் நிறைவேறுமா என்றால் வழக்கம் போல் பொருத்திருந்தான்  பார்க்க வேண்டும்.

கர்நாடக தேர்தலிக்  பிஜேபி அளித்த  வாக்குறுதிகள் இதோ….

1.    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்குதல்.

2.  ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கர்நாடக மாநிலம் முழுவதும், வேளாண் பணிகளுக்கான நீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை.

3. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப்பெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தங்கம் வழங்கப்படும்.

4. கர்நாடக மாநிலத்தில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

5.ஏழைக் குடும்பங்களின் மருத்துக் காப்பீடுக்காக ரூ.5 லட்சம் செலவில் காப்பீடு திட்டம்

6.  தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் ரூ. 1 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தல்.

7. இந்திரா கேண்டீனை  புதுபித்து  அன்னபூரணா கேண்டீன்  என்று வழங்குவோம்.

8. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 1000 பெண் காவலர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும்.

9. பெண்கள் கூட்டுறவு சங்கங்களுக்காக ரூ.10,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

10. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் விநியோகிக்கப்படும். கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.

11. நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவசமாக ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.

12.  பசுவதை தடுப்பு சட்டம் மீண்டும்   அமலுக்கு வரும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Karnataka election results 2018 election promises

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X