Karnataka Assembly Election Results 2018: கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் வாக்கு எண்ணிக்கை இன்று 38 இடங்களில் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மதியம் 12 மணிக்குள் முடிவுகள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டமன்றம், 224 உறுப்பினர்களைக் கொண்டது. அங்கு 222 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் எண்ணிக்கையில் எந்தக் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை வகுக்கிறார்கள் என்ற விவரங்களைக் காண்போம்:
மதியம் 1.00 : கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2018 : பாரதிய ஜனதா கட்சி வெற்றி. கர்நாடக முதல்வர் ஆகிறார் பி.எஸ். எடியூரப்பா
மதியம் 1.00 : கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவில் 37 தொகுதிகளில் பாஜக வெற்றி, 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி.
காலை 11.44: சாமூண்டீஸ்வரி தொகுதியில் கங்கிரஸ் சித்தராமையா தோல்வி.
காலை 11.35 : சிகாரிபுரி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வெற்றி. இந்த வெற்றியை முன்னிட்டு எடியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
காலை 10.57 : பதாமி தொகுதியில் சித்தராமையா 100 வாக்குகள் முன்னிலை.
காலை 10.31 : வருணா தொகுதியில் சித்தராமையா மகன் டாக்டர்.யதீந்தரா 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
காலை 10.26 : சாமுண்டேஷ்வரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தராமையா 12 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு.
காலை 10.19 : சிகரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா தொடந்து முன்னிலை
காலை 10.10: ரமணகரா மற்றும் சென்னாபாட்னா தொகுதியில் குமராசாமி தொடர்ந்து முன்னிலை.
காலை:10.00 : பதாமி தொகுதியில் சித்தராமையா முன்னிலை
காலை 9.57 : பாஜக சேர்ந்த எடியூரப்பா முன்னிலை.
காலை 9.54 : பதாமி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தராமையா தொடர்ந்து முன்னிலை.
காலை 9.50 : எலஹங்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் உமாநாத் வெற்றி. காங்கிரஸ் வேட்பாளர் அபய் சந்திராவை வீழ்த்தி 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றி.
காலை 9.45 : மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் குமாரசாமி, ராம்நகரா தொகுதியில் தொடர்ந்து 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
காலை 9.33 : பாஜக வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியை விட 3420 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.
காலை 9.25 : காலை 9.25 : சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையா பல ஆயிரம் வாக்குகள் பின்னடைவு. வருணா தொகுதியில் சித்தராமையா மகன் டாக்டர்.யதீந்தரா முன்னிலையில் உள்ளார்.
காலை 9.10 : காலை 9 மணி நிலவரப்படி முன்னணி நிலவரத்தில் பாஜக முந்துகிறது. முன்னணி நிலவரம் தெரிந்த 186 தொகுதிகளில் பாஜக-82, காங்கிரஸ்-78, மதச்சார்பற்ற ஜனதா தளம்-26 என முந்துகின்றன.
காலை 8.20 : தபால் வாக்குகளில் முன்னணி தெரிந்த 37 தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.
காலை 8.00 : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் வாக்கு எண்ணிக்கை 38 இடங்களில் தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.