2018ம் ஆண்டின் கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே 12ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 222 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களித்தனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தக் கர்நாடக தேர்தல் ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் சட்சியை சேர்ந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தனர். இரண்டு வருடங்களாக எந்த வித நிகழ்வுகளிலும் பெரும்பாலும் பங்கேற்காத சோனியா காந்தி இந்தத் தேர்தலுக்காக வெயில் மழை என்றும் பாராமல் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்திய நாட்டின் பிரதமர் மோடி பாஜக-வின் வெற்றிக்காகப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் செய்து வந்தார். இறுதியான பிரச்சாரம் 10ம் தேதி நிறைவு பெற்றது. பின்னர் 12ம் தேதி பொதுமக்கள் அனைவரும் அவர் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளாக பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டது. இந்த 3 கட்சிகளிலும், முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் தேர்வாகி இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்காக சித்தராமையா, பாஜக வேட்பாளராக எடியூரப்பா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து குமாரசாமி முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
பதாமி மற்றும் சாமுண்டீஷ்வரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தராமையா போட்டியிட்டார். பின்னர் ஷிகாரிபுரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்த குமாரசாமி ராம் நகரா மற்றும் சென்னாபாட்னா தொகுதிகளில் போட்டியிட்டனர்.
மே 15ம் தேதியான இன்று 38 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாகத் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போது பதாமி உட்பட பல்வேறு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விருவிருப்பாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் தபால் ஓட்டுகளில் பெற்றிருந்த எண்ணிக்கையைப் பின்னுக்கு தள்ளியது பாஜக. கர்நாடகம் முழுவதும் 28 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தது. 28 ஆயிரம் வாக்குகளில், பெரும்பான்மையைப் பெற்று சித்தராமையா முன்னிலையில் இருந்தார்.
தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. இவ்வாறு இருக்க, தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்ததும் குழம்பங்கள் ஏற்பட ஆரம்பித்தது. இருப்பினும், ‘எந்தவித குழப்பமும் வேண்டாம் நாங்கள் தான் வெற்றிபெறுவோம்’ என்று உறுதியாகக் கூறியதற்கு ஏற்ப பாஜக வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியது.
காலை 9.30 மணி முதலே பாஜக கை சற்று உயர்வாகவே ஓங்க ஆரம்பித்தது. நெருக்கடிகளும் பதற்றமும் அதிகரிக்க சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார் சித்தராமையா. 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவை வீழ்த்தியது மதசார்பற்ற ஜனதா தளம்.
சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று அவர் கையை விட்டு நழுவ, பதாமியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பதாமி தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக ஸ்ரீராமுலு போட்டியிட்டார். 3000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீராமுலுவை விட முன்னிலை வகித்தார். பின்னர் 2150 வாக்குகள் வித்தியாசத்தில் பதாமி தொகுதியை கைப்பற்றினார் சித்தராமையா. இவ்வாறு முட்டி மோதி 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
கர்நாடக தேர்தல் 2018-ல் பதற்றங்களைக் கடந்து காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், எந்தவித இன்னல்களும் இல்லாமல் ஆரம்பத்திலேயே மிகவும் எளிமையாக 37 தொகுதிகளை தட்டிப் பரித்தது பாஜக. இறுதியாக 12 மணி நிலவரப்படி 222 தொகுதிகளில், 112 இடத்தை பாஜகவும், 68 இடத்தை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்கள் பெற்று வெற்றிபெற்றது. அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றியதால், முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சாரத்தின்போதே விரைவில் கர்நாடக முதலமைச்சர் பதவியில் அமருவேன் என்று எடியூரப்பா கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய தற்போது புதிய யுக்தியைக் கையில் எடுத்துள்ளார் சித்தராமையா. பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் வகையில், , மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் ஈடுபட முடிவெடுத்தது காங்கிரஸ். மேலும் கூட்டணிக்கு சம்மதித்தால் மஜக வேட்பாளர் குமாரசாமி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே இது குறித்து அனுமதி கேட்க ஆளுநர் வாஜுபாய் வாலா-ஐ சந்திக்க காங்கிரஸ் மற்றும் மஜக சார்பில் சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் துடித்து வரும் வேளையில் மஜக தலைவர் தேவ கௌடாவிடம் தொலைப்பேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார் சோனியா காந்தி. அதே நேரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு கட்சிகளும் இவர்களுடன் கூட்டணியில் இணைய ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் முழுமையான முடிவுகள் அதிகாரப்பூரமாக வெளிவரும் வரை யாரையும் சந்திக்கப்போவது இல்லை என ஆளுநர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மாலை 4.15 மணியளவில் ஆளுநர் வாஜூபாய் வாலா-ஐ சந்தித்து சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, புதிதாக ஆட்சியமைக்கக் கூட்டணி கட்சியில் சேர்க்கும் புதிய அமைச்சர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியல் தயாரான பிறகு, கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்க இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் அனைவரின் கவனமும் கர்நாடக ஆளுநர் மீது திரும்பியுள்ளது.
இந்தப் பரபரப்பான சூழலில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முறையாகத் தேர்தலில் ஜெயிக்காத காங்கிரஸ் தற்போது பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க நினைக்கிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார். பின்பு மாலை 5.20 மணியளவில், ஆளுநரை சந்தித்து பேசினார் எடியூரப்பா.
ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, “104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றதால் பாஜக ஆட்சியமைக்க கோரியுள்ளோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறினார்” என்று பேட்டியளித்தார்.
எடியூரப்பாவை தொடர்ந்து மஜக வெற்றி வேட்பாளர் குமாரசாமி ஆளுநர் மாளிகை வந்தார். கூட்டணி முடிவை தொடந்து மஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுக்க ஆளுநரை சந்தித்தார்.
இவ்வளவு நெருக்கடிகளையும் மீறி, அதிகாரப்பூர்வமாக யார் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.