Karnataka Election Results 2023 : 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
கருத்துக் கணிப்புகள்
பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய நுழைவு வாயிலக கருதப்படும் கர்நாடகத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாக இருந்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் காங்கிரஸிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றன.
Karnataka Election Results 2023 Live Updates
மும்முனைப் போட்டி
காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடையே மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புகள் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
73 சதவீத வாக்குப்பதிவு
2023 சட்டமன்ற தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயபுரா பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகார்
கர்நாடக இறையாண்மை குறித்து பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாரதிய ஜனதாவினர் புகார் அளித்தனர்.
தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடியை விஷப் பாம்பு என காங்கிரஸும், அதற்குப் பதிலடியாக சோனியா காந்தியை விஷக் கன்னி என பாரதிய ஜனதாவும் விமர்சித்தன.
பாதுகாப்பு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பின்னர், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னணி வெற்றி நிலவரங்கள் காலை 11 மணிக்குள் தெரிந்துவிட வாய்ப்புகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:11 (IST) 14 May 2023முதல்வர் யார்? ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் தனிப்பட்ட கருத்துக்கள் சேகரிப்பு
"காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒற்றை வரித் தீர்மானத்தை சித்தராமையா முன்வைத்தார். 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவரது தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அதை டி.கே சிவகுமாரும் ஆமோதித்துள்ளார்... கார்கே கே.சி.வேணுகோபாலிடம் 3 மூத்த பார்வையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத்தின் தனிப்பட்ட கருத்துக்களை எடுத்து உயர் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்," என்று கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்
- 21:07 (IST) 14 May 2023முதல்வர் யார் என 'முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்': எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு
டி.கே.சிவகுமாரா அல்லது சித்தராமையா? புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், கூட்டத்தின் போது, காங்கிரஸ் தலைவருக்கு இந்த விஷயத்தில் அழைப்பு விடுக்க அதிகாரம் வழங்க முடிவு செய்ததால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்களுக்கு இடையே முழக்கப் போர் வெடித்த நேரத்தில், ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவர் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று விரும்பும் நேரத்தில் இது வந்துள்ளது.
- 20:24 (IST) 14 May 2023அடுத்த முதல்வர் யார் என தேர்வு செய்வது கடினமான பணி; பிரியங்க் கார்கே
அடுத்த முதல்வர் யார் என்ற ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரியங்க் கார்கே இது கடினமான தேர்வாக இருக்கும் என்று கூறினார்
- 19:55 (IST) 14 May 2023முதல்வர் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் – ராமலிங்க ரெட்டி
எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கட்சி மேலிடம் கேட்டறிந்து, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
- 19:25 (IST) 14 May 2023சிவகுமார் கர்நாடக முதல்வராக வொக்கலிகா பீடாதிபதி ஆதரவு
கர்நாடகாவின் அடுத்த முதல்வராக கர்நாடகா கட்சித் தலைவர் டி.கே.சிவகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஆதி சுஞ்சனகிரியின் முக்கிய வொக்கலிகா பீடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமிஜி ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து, மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு அனைத்து தரத்திலும் தகுதியான வேட்பாளர் சிவக்குமார் என்றும் அவர் கூறினார்.
- 18:25 (IST) 14 May 2023காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.
மாநிலத்தில் முதல் அமைச்சர் வேட்பாளர் பட்டியில் சித்த ராமையா, டி.கே.. சிவக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
- 17:31 (IST) 14 May 2023கர்நாடக முதல் அமைச்சர் யார்? மாலை 6 மணிக்கு சந்திப்பு
கர்நாடக முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் வகையில் மாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
- 16:39 (IST) 14 May 2023வெறுப்பு அரசியல், வன்முறையைப் பரப்புவதில் பஜ்ரங் தளம் நம்பிக்கை - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
பெங்களூருவில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: “பிரதமர் மோடி மற்றும் அவரது பிரச்சாரத்தால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர் எத்தனை ரோட்ஷோக்கள் செய்தாலும்... மக்கள் உற்சாகம் காட்டவில்லை. பஜ்ரங் தளம் வேறு, பஜ்ரங் பலி வேறு. பஜ்ரங் தளம் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலைப் பரப்புவதை நம்புகிறது... காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியது சட்டத்தை மீறும், மதவெறி, வகுப்புவாத வன்முறையைப் பரப்பும் எந்த ஒரு அமைப்பும் ஆகும். சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி கையாளப்படும்” என்று கூறினார்.
- 16:35 (IST) 14 May 2023பிரதமர் மோடி பிரச்சாரத்தால் மக்கள் சோர்வடைந்து விட்டார்கள் - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: “இரட்டை என்ஜின் என்றால் என்ன அர்த்தம்? நான் (மோடி) டெல்லியில் இருக்கிறேன், எனது பொம்மை பெங்களூரு, போபால் போன்ற இடங்களில் உள்ளது என்று அர்த்தம். அதற்கு பதிலாக, உண்மையான இரட்டை என்ஜின் என்பது பொருளாதார மற்றும் சமூக நலனைக் குறிக்கும். அதை கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அளித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அவரது பிரச்சாரத்தால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர் எத்தனை ரோட்ஷோக்கள் செய்தாலும்... மக்கள் உற்சாகம் காட்டவில்லை...” என்று கூறினார்.
“பெங்களூருவில் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், (பிரதமரின்) ரோட்ஷோவுக்குப் பிறகும், வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. நாங்கள் (காங்கிரஸ்) மக்கள் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்தும் வாக்குகளைப் பெற்றுள்ளோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
watch| Bengaluru: ..."People are tired of PM & his campaign, no matter how many roadshows he did...but people were not enthusiastic...": Jairam Ramesh, Congress General Secretary in-charge Communicationskarnatakaelections2023 pic.twitter.com/PNWrzPV50S
— ANI (@ANI) May 14, 2023 - 16:29 (IST) 14 May 2023ஹரப்பனஹள்ளியில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ., காங்கிரசுக்கு ஆதரவு
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஹரப்பனஹள்ளி தொகுதியில் இருந்து சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லதா மல்லிகார்ஜுன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளார் என்று கர்நாடகாவின் ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். லதா மல்லிகார்ஜுன், மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான, மறைந்த எம்.பி. பிரகாஷின் மகள் ஆவார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளார். அவரது சித்தாந்த வேர்கள் மற்றும் காங்கிரஸ் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர், அவரது கணவர் மல்லிகார்ஜுன் மற்றும் அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 6.5 கோடி கன்னடர்களுக்கு நாங்கள் ஒன்றாக சேவை செய்வோம்” என்று சுர்ஜேவாலா டிவீட் செய்துள்ளார்.
ஹரபனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட லதா மல்லிகார்ஜுன் பா.ஜ.க-வின் ஜி கருணாகர ரெட்டியை 13,845 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
- 16:23 (IST) 14 May 2023கர்நாடகாவில் பதவி விலகும் முதல்வர் பொம்மை; சித்தராமையா, சிவக்குமாருக்கு வாழ்த்து
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு பதவி விலகும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
இருவருக்குமே எனது நல்வாழ்த்துக்கள் பொம்மை என்று பொம்மை தெரிவித்துள்லார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவதில் பா.ஜ.க எப்படி கவனம் செலுத்தும் என்ற கேள்விக்கு, “அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், அமைச்சரவை கூடி தங்கள் முடிவுகளை வெளியிடட்டும், என்ன செயல்படுத்தப்படும் என்று பார்ப்போம், பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று கூறினார்.
- 14:56 (IST) 14 May 2023சித்தராமையாவுடன் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை: டி.கே. சிவகுமார்
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், அம்மாநில கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பதவிக்கு முன்னோடியாகக் கருதப்படும் சித்தராமையாவுடன் தனக்கு எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினார்.
தும்கூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.கே.சிவ்குமார், எனக்கும் சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சிலர் கூறினர், ஆனால், எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என்று இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் தலைவரின் இந்த கருத்துகள் வந்துள்ளன.
“காங்கிரஸ் கட்சிக்காக பலமுறை தியாகம் செய்துள்ளேன். நான் தியாகம் செய்து உதவி செய்து சித்தராமையாவுடன் நின்றேன். தொடக்கத்தில் என்னை அமைச்சராக்காதபோது பொறுமையாக இருந்தேன் அல்லவா? சித்தராமையாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்” என்று டி.கே. சிவக்குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Some people say that I have differences with Siddaramaiah but I want to clear that there is no difference between us. Many times I have sacrificed for the party and stood with Siddaramaiah ji. I have given cooperation to Siddaramaiah: Karnataka Congress president DK Shivakumar pic.twitter.com/yUU3GKsGKQ
— ANI (@ANI) May 14, 2023 - 14:23 (IST) 14 May 2023கர்நாடகா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம்: மூன்று பார்வையாளர்களை நியமித்தது காங்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடகாவில் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்களாக முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் தீபக் பபாரியா ஆகியோரை நியமித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சி.எல்.பி) கூட்டத்தை மத்திய பார்வையாளர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே (முன்னாள் முதல்வர், மகாராஷ்டிரா), ஜிதேந்திர சிங் (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்) தீபக் பபாரியா (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர்) ஆகியோரை கர்நாடகாவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு பார்வையாளர்களாக நியமித்துள்ளார்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Hon’ble Congress President has deputed Shri.Sushilkumar Shinde (Former Chief Minister, Maharashtra), Shri.Jitendra Singh (AICC GS) and Shri.Deepak Babaria (former AICC GS) as observers for the election of the CLP Leader of Karnataka.
— K C Venugopal (@kcvenugopalmp) May 14, 2023 - 14:00 (IST) 14 May 2023இது பிரதமர் மோடியின் தோல்வி அல்ல- பொம்மை
செய்தியாளர்களிடம் இன்று பேசிய முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, நாங்கள் எங்கள் தலைவருடன் சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பாஜக சார்பில் போட்டியிட்ட நபர்களை சந்தித்து பேசுபோம். தோல்வி குறித்து ஆராய்ந்து லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாடத் திருத்தத்தை மேற்கொள்வோம் என்றார்.
#WATCH | We had an informal meeting with our president and we have discussed certain issues and we'll shortly call elected representatives and the people who contested. We will have in-depth analysis and do the course correction to come back to power in the Lok Sabha elections:… pic.twitter.com/3uYaa1SPsu
— ANI (@ANI) May 14, 2023 - 13:16 (IST) 14 May 20232-3 நாட்களில் அறிவிக்கப்படும்: சையது நாசர் உசேன்
கர்நாடகாவின் அடுத்த முதல்வரை கட்சி எப்போது அறிவிக்கும் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் சையத் நாசர் உசேன், “முதல்வர் யார் என்பது இன்னும் 2-3 நாட்களில் அறிவிக்கப்படும், மேலும் விரைவில் அமைச்சரவை அமைக்க தயாராகி வருகிறோம்” என்றார்.
- 12:44 (IST) 14 May 2023மல்லிகார்ஜுன கார்கே டெல்லி பயணம்
காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லி பயணம்
கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடன் ஆலோசனை
டி.கே.சிவகுமார், சித்தராமையா வீடுகளின் முன்பு அடுத்த முதல்வர் என வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு
- 12:15 (IST) 14 May 2023கார்கே இல்லத்திற்கு சித்தராமையா வருகை
பெங்களூருவில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்திற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வருகை
கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டம் (சிஎல்பி) சில மணி நேரங்களில் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையா பெங்களூருவில் உள்ள தேசியக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்துக்குச் சென்றார். முதல்வர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் முன்னணியில் உள்ளனர்.
- 11:26 (IST) 14 May 2023முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி
முதல்வர் பதவிக்கு இருவர் அல்ல, நான்கு பேர் போட்டியிடுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவியை முடிவு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், மாநில செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், “டி.கே.சிவகுமார், சித்தராமையா மட்டுமின்றி எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரும் ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வர் குறித்து கட்சியின் உயர்மட்டக் குழுவும், எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்வார்கள்" என்று கூறினார்.
- 11:25 (IST) 14 May 2023மக்களின் இதயங்களை வெல்க: கபில் சிபல்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் தனது முன்னாள் கட்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் இருப்பதன் மூலம் 'மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
சிபல் தனது ட்விட்டரில், "கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவது கடினமானது. மக்களின் இதயங்களை வெல்வது கடினமானது! அடுத்த 5 ஆண்டுகளுக்கு திறந்த, நேர்மையான, பாரபட்சமில்லாமல் நடந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
- 10:44 (IST) 14 May 2023அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்?
முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள், அவரது வீட்டிற்கு வெளியே, அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பதாகைகளை வைத்துள்ளனர்.
#WATCH | Karnataka Congress President DK Shivakumar's supporters put up a poster outside his residence in Bengaluru, demanding DK Shivakumar to be declared as "CM" of the state. pic.twitter.com/N6hFXSntJy
— ANI (@ANI) May 14, 2023 - 10:21 (IST) 14 May 2023அடுத்த முதல்வர் சித்தராமையா?
முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையா ஆதரவாளர்கள், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பேனர்களை அவரது வீட்டின் முன்பு வைத்துள்ளனர்.
#WATCH | Supporters of senior Congress leader Siddaramaiah put up a poster outside Siddaramaiah's residence in Bengaluru, referring to him as "the next CM of Karnataka." pic.twitter.com/GDLIAQFbjs
— ANI (@ANI) May 14, 2023 - 09:42 (IST) 14 May 2023காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவரே
டி.கே சிவகுமார் 60 வயதான கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர், வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். 2020ம் வருடம் இவர் அமலாக்க துறையால், கைது செய்யப்பட்டபோதும், காங்கிரஸ் கட்சி இவருக்கு தலைமை பொறுப்பு வழங்கியது.
- 08:31 (IST) 14 May 2023தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்
” தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்: மக்களின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக முயற்சி செய்தபோதும் எங்களால் வெல்ல முடியவில்லை. முழு முடிவுகள் வந்த பிறகு இது தொடர்பாக முழு ஆய்வு மேற்கொள்ளப்படும்”- பசவராஜ் பொம்மை
- 08:18 (IST) 14 May 2023தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்
” தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்: மக்களின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக முயற்சி செய்தபோதும் எங்களால் வெல்ல முடியவில்லை. முழு முடிவுகள் வந்த பிறகு இது தொடர்பாக முழு ஆய்வு மேற்கொள்ளப்படும்”- பசவராஜ் பொம்மை
- 08:05 (IST) 14 May 2023கர்நாடக முதல்வர் யார்? காங். எம்.எல். ஏக்கள் கூட்டம்
1989 தேர்தலுக்கு பிறகு காங்கிரச் கட்சி 136 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- 22:29 (IST) 13 May 2023ஜெயநகர் வாக்கு எண்ணிக்கையில் சலசலப்பு
ஜெயநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே குழப்பம் ஏற்பட்டது. இறுதி வாக்கெடுப்பு முடிவுக்காக காத்திருக்கும் ஒரே ஒரு தொகுதி இதுதான். இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆர்.அசோக் மற்றும் தேஜஸ்வி சூர்யா காணப்பட்டதையடுத்து சலசலப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை மீறிய வகையில் தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
- 22:15 (IST) 13 May 2023முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- 21:52 (IST) 13 May 2023நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார், “நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை தொடர்வோம், முடிவெடுப்பது தேசிய தலைமையிடம் விடப்படும்” என்று அவர் கூறினார்.
- 20:53 (IST) 13 May 2023போரில் வெற்றி, மிகப்பெரிய போரில் வெல்ல வேண்டும்: கார்கே
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "போரில் வெற்றி பெற்றோம். ஆனால், போரில் வெற்றி பெற வேண்டும். அதனால்தான், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் போரில் வெற்றி பெறுவோம். போரில் வெற்றி பெற்றால்தான் வெற்றி கிடைக்கும். நாடு காப்பாற்றப்படும். இல்லையென்றால், ஒரு மாநிலம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆனால், எல்லா இடங்களிலும் நியாயமான, ஜனநாயக ஆட்சி அமைய வேண்டுமெனில், வரும் தேர்தலில் நாம் மிகப் பெரிய போரை, மிகப் பெரிய போரை எதிர்கொள்ள வேண்டும்.
"இது ஊழலுக்கு எதிரான வெற்றி, இது 40 சதவீத கமிஷனுக்கு எதிரான வெற்றி, இது பணவீக்கத்திற்கு எதிரான வெற்றி... இது காங்கிரஸ் உத்தரவாதத்தின் வெற்றி." கார்கே கூறினார்
- 20:39 (IST) 13 May 2023ஜனநாயகத்தை காப்பாற்ற கர்நாடகா புதிய மந்திரத்தை கொடுத்துள்ளது: சுர்ஜேவாலா
கர்நாடகா காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, ஜனநாயகத்தை காப்பாற்ற கர்நாடகா புதிய மந்திரத்தை வழங்கியுள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழி இது.
"பா.ஜ.க இல்லாத தென்னிந்தியா' உருவாகியுள்ளதை கர்நாடக மக்கள் உறுதி செய்துள்ளனர். பிரிவினைவாத அரசியலுக்கும் வெறுப்பு அரசியலுக்கும் இது ஒரு பதில். ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், வெளிப்படையான மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம், அடுத்த அரசாங்கம் ஒவ்வொரு கன்னடர்களுக்கும் சேவை செய்யும். எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் கூட, என்று சுர்ஜேவாலா கூறினார்
- 20:28 (IST) 13 May 2023'பா.ஜ.க இல்லாத பாரதம்’ உருவாகி வருகிறது: மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கூறியும், இந்த வெற்றியால் பாஜக இல்லாத உருவாக்க முடிந்தது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
"கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் என்று நாங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப கூறியிருந்தோம். நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது தேசத்தை உற்சாகப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
"காங்கிரஸ் கட்சியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்-முக்த் பாரதத்தை உருவாக்குவார்கள் என்றும் பாஜக எங்களைக் கேலி செய்தது. ஆனால், இன்றைக்கு உண்மை என்னவென்றால் 'பாஜக-முக்த் தக்ஷின் பாரத்' (பா.ஜ.க இல்லாத பாரதம்). கார்கே மேலும் கூறினார்.
கட்சிக்குள் உள்ள ஒற்றுமை காரணமாகவே கட்சி இவ்வளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்றார். "நாங்கள் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமையால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஒற்றுமையால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டிருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
- 20:27 (IST) 13 May 2023'பா.ஜ.க இல்லாத பாரதம்’ உருவாகி வருகிறது: மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கூறியும், இந்த வெற்றியால் பாஜக இல்லாத உருவாக்க முடிந்தது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
"கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் என்று நாங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப கூறியிருந்தோம். நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது தேசத்தை உற்சாகப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
"காங்கிரஸ் கட்சியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்-முக்த் பாரதத்தை உருவாக்குவார்கள் என்றும் பாஜக எங்களைக் கேலி செய்தது. ஆனால், இன்றைக்கு உண்மை என்னவென்றால் 'பாஜக-முக்த் தக்ஷின் பாரத்' (பா.ஜ.க இல்லாத பாரதம்). கார்கே மேலும் கூறினார்.
கட்சிக்குள் உள்ள ஒற்றுமை காரணமாகவே கட்சி இவ்வளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்றார். "நாங்கள் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமையால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஒற்றுமையால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டிருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
- 20:01 (IST) 13 May 2023டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஒரே மேடையில்; வெற்றிக்கு பின் பலத்தை காட்டிய காங்கிரஸ்
சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் கொண்டாட்டத்தில் மூழ்கிய நிலையில், மல்லிகார்ஜுன் கார்கே, மாநில கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலத்தை வெளிப்படுத்தினர். சித்தராமையா அல்லது டி.கே.சிவகுமாரா? காங்கிரஸ் கட்சி அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யப்போகிறது என்பதுதான் அனைவரின் பார்வையும்.
- 19:52 (IST) 13 May 2023திசை திருப்பும் அரசியல் பலிக்காது என்பது நிரூபணம் - பிரியங்கா காந்தி
திசை திருப்பும் அரசியல் பலிக்காது என்பது நிரூபணமானது என கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
- 19:33 (IST) 13 May 2023கர்நாடக தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும் – சரத் பவார்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் உள்ள சூழ்நிலையை காட்டுவதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்று பவார் கூறினார். பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
- 18:58 (IST) 13 May 2023தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்: பசவராஜ் பொம்மை
“கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். நமது தவறுகளை அலசி ஆராய்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம்” என மாநிலத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
- 18:48 (IST) 13 May 2023மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் இது: சரத் பவார்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் உள்ள சூழ்நிலையை காட்டுவதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும். பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்று சரத் பவார் கூறினார்.
- 18:39 (IST) 13 May 2023கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?
காங்கிரஸ் கட்சி மாலை 5.30 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 113 இடங்கள் தேவை.
- 18:38 (IST) 13 May 2023கர்நாடக தேர்தல்: ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி
ஷிமோகா தொகுதியில் பாஜக தலைவர் சன்னபசப்பா 27,674 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு சன்னபசப்பா கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
- 18:27 (IST) 13 May 2023கர்நாடக தேர்தல் வெற்றி: காங்கிரஸிற்கு பிரதமர் வாழ்த்து
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள காங்கிரஸிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 17:54 (IST) 13 May 2023இதுதான் பா.ஜ.க. தோல்விக்கு காரணம்; நாராயண சாமி பரபரப்பு பேட்டி
கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியதற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கமிஷன், மக்கள் மத்தியில் அதிருப்திதான் காரணம் என புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
- 17:28 (IST) 13 May 2023தற்போது வரை 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி. தற்போது வரை 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேலும், 22 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை * பாஜக 51 இடங்களில் வெற்றி, 13 இடங்களில் முன்னிலை
- 16:44 (IST) 13 May 2023காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட்
கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும்" காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட்
- 16:43 (IST) 13 May 2023ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
"காந்திஜியைப் போலவே நீங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள்" "வெற்றிக்கு மட்டுமின்றி வெற்றி பெற்ற முறைக்கும் பாராட்டுக்கள்" கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
- 16:43 (IST) 13 May 2023இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி
பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளின் மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது" "இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்" இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி
- 16:41 (IST) 13 May 2023காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இமாலய வெற்றி
கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
- 16:06 (IST) 13 May 2023தி.மு.க எம்.பி கனிமொழி ட்வீட்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது" - கனிமொழி ட்வீட்
- 15:41 (IST) 13 May 2023நாளை ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்கவைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
- 15:34 (IST) 13 May 2023முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து
கர்நாடக மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தலின் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
- 15:31 (IST) 13 May 2023திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம் : மு.க.ஸ்டாலின்
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் ஒன்றினைவோம். இந்தியாவில் மக்கள் ஆட்சியையும் அரசியலமைப்பு விழுமிகளையும் மீட்டெடுப்போம். கர்நாடகத்தில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- 14:56 (IST) 13 May 2023ராகுல் காந்தி பேட்டி!
"முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி". என்று டெல்லியில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
- 14:49 (IST) 13 May 2023லிங்காயத் வாக்குகளை இழந்த பாஜக!
லிங்காயத்து சமூக மக்கள் கணிசமாக வசிக்கும் 70 தொகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கியது. லிங்காயத்து பகுதியில் காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2018 தேர்தலில் 22 இடங்களை வென்ற காங்கிரஸ், இப்போது 25 இடங்களில் கூடுதலாக முன்னிலை.
2018 தேர்தலில் 41 இடங்களில் வென்றிருந்த பாஜக 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. லிங்காயத்து பகுதி முன்னிலை - 2018 வென்றதைவிட 21 இடங்களில் பின்தங்கியது பாஜக.
- 14:48 (IST) 13 May 2023பறிபோன பாஜக வெற்றி
பாஜகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாகவும், பிற கட்சியிலும் போட்டியிட்டதால் அக்கட்சியின் வெற்றி பறிபோனது. 10-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றிக்கு அதிருப்தியாளர்கள் வேட்டு வைத்துள்ளனர்.
- 14:00 (IST) 13 May 2023கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி; அடுத்த முதல்வர் யார்?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. போட்டி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் வாக்குப்பதிவுக்கு முன் போன்ஹோமியின் படத்தை வணங்கினர்.
சிவக்குமார் அல்லது காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே (அவரது முதல்வர் என்ற பெயரும் சிலரால் பரப்பப்பட்டது) உட்பட வேறு எந்தத் தலைவருடனும் ஒப்பிடும்போது, தற்போதைய நிலவரப்படி, எண்ணிக்கை விளையாட்டில் சித்தராமையா முன்னிலையில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
- 13:54 (IST) 13 May 2023முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
- 13:53 (IST) 13 May 2023'முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்': மல்லிகார்ஜுன கார்கே
கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
- 13:41 (IST) 13 May 2023சித்தராமையா பேட்டி!
“புதிதாக பொறுப்பேற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள் அதன் அடிப்படையில் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
- 13:28 (IST) 13 May 2023நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உதரணம்: சித்தராமையா பேச்சு!
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா தனது பேட்டியில் கூறியதாவது:-
“பணம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சியை திரும்ப கொண்டு வர பாஜக முயற்சித்தனர், அது தோல்வியில் முடிந்துவிட்டது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் பிரசாரம் வெற்றி பெற வைத்துள்ளது. கட்சியில் உள்ள அனைவரும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உதரணமான தேர்தல் இது!”
- 13:21 (IST) 13 May 2023மீண்டும் கனகபுராவை கைப்பற்றினார் டி.கே.சிவக்குமார்!
கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 72% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கனகாபுரா தொகுதியில் அமோக வெற்றி பெற்ற வர செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
- 13:18 (IST) 13 May 2023சித்தராமையாவுக்கு ஸ்டாலின்
கர்நாடக தேர்தலில் வெற்றிமுகத்தில் காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 13:17 (IST) 13 May 2023டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர்!
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
- 13:04 (IST) 13 May 2023'கட்சியை சீரமைக்க முயற்சிப்போம்
கர்நாடகாவில் காங்கிரஸை விட பாஜக பின்தங்கியுள்ள நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்த முடிவுகளை எங்களின் முன்னேற்றத்தில் எடுத்துக்கொண்டு அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் கட்சியை மறுசீரமைக்க முயற்சிப்போம்" என்றார்.
- 13:02 (IST) 13 May 2023கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு: காங்கிரஸ் ரியாக்ஷன்
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் உறுதியான நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், பிரதமர் தோல்வி என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. பாரதிய ஜனதா தனது தேர்தல் பிரச்சாரத்தை பிரதமருக்கும், அவருக்கு ‘ஆசிர்வாதம்’ பெறுவதற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தியது. அது தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டது! – ஜெய்ராம் ரமேஷ் ட்வீட்
As the results firm up in Karnataka it is now certain that the Congress has won and the PM has lost. The BJP had made its election campaign a referendum on the PM and on the state getting his 'ashirwaad'. That has been decisively rejected!
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 13, 2023
The Congress party fought these… - 12:57 (IST) 13 May 2023கடலோர கர்நாடகா, பெங்களூரில் பாஜக எப்படி செயல்பட்டது?
பாஜக 67 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் 19 இடங்களில் 14 இடங்களிலும், பெங்களூருவில் 28 இடங்களில் 17 இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
பாரம்பரிய கோட்டையான மும்பை கர்நாடகா (50 இடங்கள்), பழைய மைசூர் (64 இடங்கள்), ஹைதராபாத் கர்நாடகா (40 இடங்கள்) மற்றும் மத்திய கர்நாடகா (23 இடங்கள்) ஆகியவற்றில் கட்சி மோசமான நிலையில் உள்ளது.
- 12:54 (IST) 13 May 2023தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வர் பொம்மை
கர்நாடகாவில் காங்கிரஸ் 129 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை காணும் வேளையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார். "பிரதமர் மோடி மற்றும் தொண்டர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எங்களால் ஒரு அடையாளத்தை உருவாக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.
watch | We've not been able to make the mark. Once the results come we will do a detailed analysis. As a national party, we will not only analyse but also see what deficiencies and gaps were left at various levels. We take this result in our stride: Karnataka CM Basavaraj Bommai pic.twitter.com/uXXw26j8BO
— ANI (@ANI) May 13, 2023 - 12:32 (IST) 13 May 2023அத்தானியில் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சவடி முன்னிலை
கர்நாடகாவில் அத்தானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவடி தற்போது முன்னிலை வகித்து வருகிறார். அவர் பாஜகவின் மகேஷ் குமடஹள்ளியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
- 12:26 (IST) 13 May 2023தார்வாட் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் வினய் குல்கர்னி வெற்றி
தார்வாட் சட்டமன்றத் தொகுதியில் நுழைய மறுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளருமான வினய் குல்கர்னி பாஜக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார். குல்கர்னியின் வெற்றியை தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
- 12:08 (IST) 13 May 2023ஷிகான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் யாசிர் அகமது கான் பதானை எதிர்த்து போட்டியிட்டார்.
- 12:03 (IST) 13 May 2023காங்கிரஸ் எம்எல்ஏக்களை தமிழகத்திற்கு மாற்றுமா?
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், அதன் எம்எல்ஏக்கள் இன்று மாலை பெங்களூருவில் உள்ள ஷாங்கிரிலா ஹோட்டலில் கூடுகின்றனர்.
எவ்வாறாயினும், கட்சி அது எதிர்பார்த்தபடி 130 இடங்களுக்கும் குறைவான இடங்களைப் பெற்றால், எம்.எல்.ஏக்கள் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மாறுவார்கள் என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன- சென்னையில் இருந்து அருண் ஜனார்த்தனன்
- 12:00 (IST) 13 May 2023கனகபுரா தொகுதியில் டிகே சிவகுமார் வெற்றி
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் கனகபுராவில் 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அசோக் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பி நாகராஜு முறையே 12 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.
- 11:57 (IST) 13 May 2023வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி
கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, வருணா தொகுதியில் பாஜக அமைச்சர் சோமன்னாவை விட 25 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தின்படி, சித்தராமையா 18,661 வாக்குகளும், வி.சோமன்னா 13,180 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- 11:42 (IST) 13 May 2023ஹாசனில் JDS வேட்பாளர் முன்னிலை
ஹாசனில், ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் ஸ்வரூப் பிரகாஷ் முன்னிலை வகிக்கிறார், பாஜகவின் பிரீதம் கவுடா பின்தங்கியுள்ளார். பிரகாஷ் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த எச்.எஸ்.பிரகாஷின் மகன் ஆவார், இதற்கு அவர் முன்பு ஹாசன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2018ல் ஹாசன் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் கவுடா ஆவார்
- 11:39 (IST) 13 May 2023பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை பெற்று பாதி வழியை கடந்துள்ளதால், பெங்களூருவில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
VIDEO | Karnataka Election Results 2023: Congress supports celebrate, raise slogans outside counting centre in Hubballi. karnatakaresultswithpti pic.twitter.com/OcwnAJCOhV
— Press Trust of India (@PTI_News) May 13, 2023 - 11:35 (IST) 13 May 2023காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்- சித்தராமையா
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, அக்கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாஜக 65 முதல் 70 இடங்களிலும், ஜேடிஎஸ் 25 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். வருணா தொகுதியில் வெற்றி பெறுவேன் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார்.
- 11:32 (IST) 13 May 2023காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்
கர்நாடகாவில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால், பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதற்கு நேர்மாறாக, காங்கிரஸுக்குப் பின்னால் கட்சி பின்தங்கியதாகப் போக்குகள் காட்டுவதால், பாஜக தொண்டர்கள் அமைதியாக உள்ளனர்.
- 11:30 (IST) 13 May 2023காலை 11 மணி நிலவரப்படிவாக்கு எண்ணிக்கை நிலவரம்
3 மணி நேர வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி பகுதிவாரியான போக்குகளைப் பாருங்கள்.
காங்கிரஸ்: 118
பாஜக: 71
ஜேடிஎஸ்: 27
- 11:28 (IST) 13 May 2023இன்று மாலை ஷங்கிரிலாவில் கூடும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்
கர்நாடகாவில் காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை பெங்களூருவில் உள்ள ஷங்கிரிலாவில் கூடுவார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.
- 10:45 (IST) 13 May 2023காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
- 10:31 (IST) 13 May 2023ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கோயிலில் சாமி தரிசனம்
சன்னபட்னாவில் பின் தங்கியிருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி குமாரசாமி இன்று பெங்களூருவில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
#WATCH | Former Karnataka CM & JDS leader HD Kumaraswamy visits a temple in Bengaluru amid counting of votes for #KarnatakaPolls.#KarnatakaElectionResults pic.twitter.com/T2wCl2djAq
— ANI (@ANI) May 13, 2023 - 10:28 (IST) 13 May 2023பாஜக பசனகவுடா பாட்டீல் முன்னிலை
பிஜப்பூரில் பாஜக தலைவர் பசனகவுடா பாட்டீல் யத்னால் முன்னிலை
பிஜப்பூர் (விஜயபுரா) நகரில் பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் யத்னால், காங்கிரஸின் அப்துல் ஹமீது கஜாசாப் முஷாரிப்பை விட 7,136 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 10:13 (IST) 13 May 2023மண்டியாவில் பாஜக மூன்றாவது இடம்
வொக்கலிகா சமூகத்தின் மையப்பகுதியான மாண்டியாவில் பாஜக மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஜேடிஎஸ் வேட்பாளர் எச் டி மஞ்சு மற்றும் ஐஎன்சி வேட்பாளர் பி எல் தேவராஜை விட பாஜக அமைச்சர் நாராயண் கவுடா கேசி பின்தங்கியுள்ளார்.
- 09:20 (IST) 13 May 2023பாதி தூரத்தை கடந்த காங்கிரஸ்
ஒரு மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, கர்நாடகாவில் காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று பாதி தூரத்தை கடந்தது.
அதே சமயம் பாஜக 84 இடங்களைக் கைப்பற்றி பின்தங்கியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஒரு கட்சி அல்லது கூட்டணி 113 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.
- 09:05 (IST) 13 May 2023சாமராஜ்நகரில் காங்கிரஸ் முன்னிலை
பெங்களூரு தெற்கு, பட்கலில் பாஜக முன்னிலை; சாமராஜ்நகரில் காங்கிரஸ் முன்னிலை
தேர்தல் ஆணையத்தின் முன்னிலை நிலவரப்படி, பட்கல் மற்றும் பெங்களூரு தெற்கில் பாஜக முன்னிலை வகிக்கிறது; சாமராஜ்நகர் மற்றும் சாம்ராஜ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
- 08:54 (IST) 13 May 2023காங்கிரஸ் முன்னிலை
முன்னணி நிலவரம்: பாஜக-வை பின்தள்ளி காங்கிரஸ் முன்னிலை
- 08:42 (IST) 13 May 2023காங்கிரஸ் 85 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் 85 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன
ஜேடிஎஸ் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- 08:34 (IST) 13 May 2023பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்க எதையும் செய்வோம்
பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்க எதையும் செய்வோம் : யதீந்திர சித்தராமையா
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகனுமான யதீந்திர சித்தராமையா, “பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்க எதையும் செய்வோம்.. கர்நாடகாவின் நலன் கருதி எனது தந்தை முதல்வராக வேண்டும். " என்றார்,
- 08:20 (IST) 13 May 2023பா.ஜ.க முன்னிலை
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க முன்னிலை
பாஜக 6, காங்கிரஸ் 4, ஜே.டி.எஸ் 1 என முன்னிலை
இது தொடக்க நிலை முன்னிலை நிலவரம்
- 08:13 (IST) 13 May 2023வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது
306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன
வாக்கு எண்ணிக்கையையொட்டி, கர்நாடகா முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு
பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்
- 08:09 (IST) 13 May 2023இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறப்பு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை
- 08:09 (IST) 13 May 2023இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறப்பு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை
- 07:45 (IST) 13 May 2023காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சற்று நேரத்தில் (காலை 8 மணிக்கு) வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் குமாரசாமியின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
- 07:36 (IST) 13 May 2023தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் பாஜகவை விட காங்கிரஸிற்கு முன்னிலை அளித்துள்ளன.
எனினும், தொங்கு பேரவை அமைய வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்துகளும் மேலோங்குகின்றன.கணிப்புகளின்படி, JD(S) 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வாய்ப்புகள் உள்ளன.
2018 தேர்தலில் அக்கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது.
- 07:11 (IST) 13 May 202373 சதவீத வாக்குகள் பதிவு
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் 73.19% வாக்குகள் பதிவாகியிருந்தன.
1957ல் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது கர்நாடகாவில் இதுவே அதிகபட்சமாக இருந்தது. இதற்கு முன்பு 201ல் 72.1% வாக்குகள் பதிவாகியிருந்தன.
- 07:02 (IST) 13 May 2023பெங்களூருவில் 144 தடை உத்தரவு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன.
இந்த நிலையில் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 06:47 (IST) 13 May 2023காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சற்று நேரத்தில் (காலை 8 மணிக்கு) வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் குமாரசாமியின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.