Karnataka Election Results 2023 : 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
கருத்துக் கணிப்புகள்
பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய நுழைவு வாயிலக கருதப்படும் கர்நாடகத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாக இருந்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் காங்கிரஸிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றன.
Karnataka Election Results 2023 Live Updates
மும்முனைப் போட்டி
காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடையே மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புகள் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
73 சதவீத வாக்குப்பதிவு
2023 சட்டமன்ற தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜயபுரா பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகார்
கர்நாடக இறையாண்மை குறித்து பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாரதிய ஜனதாவினர் புகார் அளித்தனர்.
தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடியை விஷப் பாம்பு என காங்கிரஸும், அதற்குப் பதிலடியாக சோனியா காந்தியை விஷக் கன்னி என பாரதிய ஜனதாவும் விமர்சித்தன.
பாதுகாப்பு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பின்னர், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னணி வெற்றி நிலவரங்கள் காலை 11 மணிக்குள் தெரிந்துவிட வாய்ப்புகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
“காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒற்றை வரித் தீர்மானத்தை சித்தராமையா முன்வைத்தார். 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவரது தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அதை டி.கே சிவகுமாரும் ஆமோதித்துள்ளார்… கார்கே கே.சி.வேணுகோபாலிடம் 3 மூத்த பார்வையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத்தின் தனிப்பட்ட கருத்துக்களை எடுத்து உயர் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்,” என்று கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்
டி.கே.சிவகுமாரா அல்லது சித்தராமையா? புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், கூட்டத்தின் போது, காங்கிரஸ் தலைவருக்கு இந்த விஷயத்தில் அழைப்பு விடுக்க அதிகாரம் வழங்க முடிவு செய்ததால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்களுக்கு இடையே முழக்கப் போர் வெடித்த நேரத்தில், ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவர் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று விரும்பும் நேரத்தில் இது வந்துள்ளது.
அடுத்த முதல்வர் யார் என்ற ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரியங்க் கார்கே இது கடினமான தேர்வாக இருக்கும் என்று கூறினார்
எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கட்சி மேலிடம் கேட்டறிந்து, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வராக கர்நாடகா கட்சித் தலைவர் டி.கே.சிவகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஆதி சுஞ்சனகிரியின் முக்கிய வொக்கலிகா பீடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமிஜி ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து, மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு அனைத்து தரத்திலும் தகுதியான வேட்பாளர் சிவக்குமார் என்றும் அவர் கூறினார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.
மாநிலத்தில் முதல் அமைச்சர் வேட்பாளர் பட்டியில் சித்த ராமையா, டி.கே.. சிவக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
கர்நாடக முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் வகையில் மாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
பெங்களூருவில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: “பிரதமர் மோடி மற்றும் அவரது பிரச்சாரத்தால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர் எத்தனை ரோட்ஷோக்கள் செய்தாலும்… மக்கள் உற்சாகம் காட்டவில்லை. பஜ்ரங் தளம் வேறு, பஜ்ரங் பலி வேறு. பஜ்ரங் தளம் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலைப் பரப்புவதை நம்புகிறது… காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியது சட்டத்தை மீறும், மதவெறி, வகுப்புவாத வன்முறையைப் பரப்பும் எந்த ஒரு அமைப்பும் ஆகும். சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி கையாளப்படும்” என்று கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: “இரட்டை என்ஜின் என்றால் என்ன அர்த்தம்? நான் (மோடி) டெல்லியில் இருக்கிறேன், எனது பொம்மை பெங்களூரு, போபால் போன்ற இடங்களில் உள்ளது என்று அர்த்தம். அதற்கு பதிலாக, உண்மையான இரட்டை என்ஜின் என்பது பொருளாதார மற்றும் சமூக நலனைக் குறிக்கும். அதை கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அளித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அவரது பிரச்சாரத்தால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர் எத்தனை ரோட்ஷோக்கள் செய்தாலும்… மக்கள் உற்சாகம் காட்டவில்லை…” என்று கூறினார்.
“பெங்களூருவில் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், (பிரதமரின்) ரோட்ஷோவுக்குப் பிறகும், வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. நாங்கள் (காங்கிரஸ்) மக்கள் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்தும் வாக்குகளைப் பெற்றுள்ளோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
#watch| Bengaluru: …”People are tired of PM & his campaign, no matter how many roadshows he did…but people were not enthusiastic…”: Jairam Ramesh, Congress General Secretary in-charge Communications#karnatakaelections2023 pic.twitter.com/PNWrzPV50S
— ANI (@ANI) May 14, 2023
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஹரப்பனஹள்ளி தொகுதியில் இருந்து சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லதா மல்லிகார்ஜுன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளார் என்று கர்நாடகாவின் ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். லதா மல்லிகார்ஜுன், மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான, மறைந்த எம்.பி. பிரகாஷின் மகள் ஆவார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளார். அவரது சித்தாந்த வேர்கள் மற்றும் காங்கிரஸ் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர், அவரது கணவர் மல்லிகார்ஜுன் மற்றும் அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 6.5 கோடி கன்னடர்களுக்கு நாங்கள் ஒன்றாக சேவை செய்வோம்” என்று சுர்ஜேவாலா டிவீட் செய்துள்ளார்.
ஹரபனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட லதா மல்லிகார்ஜுன் பா.ஜ.க-வின் ஜி கருணாகர ரெட்டியை 13,845 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு பதவி விலகும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
இருவருக்குமே எனது நல்வாழ்த்துக்கள் பொம்மை என்று பொம்மை தெரிவித்துள்லார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவதில் பா.ஜ.க எப்படி கவனம் செலுத்தும் என்ற கேள்விக்கு, “அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், அமைச்சரவை கூடி தங்கள் முடிவுகளை வெளியிடட்டும், என்ன செயல்படுத்தப்படும் என்று பார்ப்போம், பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று கூறினார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், அம்மாநில கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பதவிக்கு முன்னோடியாகக் கருதப்படும் சித்தராமையாவுடன் தனக்கு எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினார்.
தும்கூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.கே.சிவ்குமார், எனக்கும் சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சிலர் கூறினர், ஆனால், எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என்று இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் தலைவரின் இந்த கருத்துகள் வந்துள்ளன.
“காங்கிரஸ் கட்சிக்காக பலமுறை தியாகம் செய்துள்ளேன். நான் தியாகம் செய்து உதவி செய்து சித்தராமையாவுடன் நின்றேன். தொடக்கத்தில் என்னை அமைச்சராக்காதபோது பொறுமையாக இருந்தேன் அல்லவா? சித்தராமையாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்” என்று டி.கே. சிவக்குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Some people say that I have differences with Siddaramaiah but I want to clear that there is no difference between us. Many times I have sacrificed for the party and stood with Siddaramaiah ji. I have given cooperation to Siddaramaiah: Karnataka Congress president DK Shivakumar pic.twitter.com/yUU3GKsGKQ
— ANI (@ANI) May 14, 2023
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடகாவில் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்களாக முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் தீபக் பபாரியா ஆகியோரை நியமித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சி.எல்.பி) கூட்டத்தை மத்திய பார்வையாளர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே (முன்னாள் முதல்வர், மகாராஷ்டிரா), ஜிதேந்திர சிங் (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்) தீபக் பபாரியா (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர்) ஆகியோரை கர்நாடகாவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு பார்வையாளர்களாக நியமித்துள்ளார்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Hon’ble Congress President has deputed Shri.Sushilkumar Shinde (Former Chief Minister, Maharashtra), Shri.Jitendra Singh (AICC GS) and Shri.Deepak Babaria (former AICC GS) as observers for the election of the CLP Leader of Karnataka.
— K C Venugopal (@kcvenugopalmp) May 14, 2023
செய்தியாளர்களிடம் இன்று பேசிய முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, நாங்கள் எங்கள் தலைவருடன் சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பாஜக சார்பில் போட்டியிட்ட நபர்களை சந்தித்து பேசுபோம். தோல்வி குறித்து ஆராய்ந்து லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாடத் திருத்தத்தை மேற்கொள்வோம் என்றார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வரை கட்சி எப்போது அறிவிக்கும் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் சையத் நாசர் உசேன், “முதல்வர் யார் என்பது இன்னும் 2-3 நாட்களில் அறிவிக்கப்படும், மேலும் விரைவில் அமைச்சரவை அமைக்க தயாராகி வருகிறோம்” என்றார்.
காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லி பயணம்
கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடன் ஆலோசனை
டி.கே.சிவகுமார், சித்தராமையா வீடுகளின் முன்பு அடுத்த முதல்வர் என வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்திற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வருகை
கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டம் (சிஎல்பி) சில மணி நேரங்களில் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையா பெங்களூருவில் உள்ள தேசியக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்துக்குச் சென்றார். முதல்வர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் முன்னணியில் உள்ளனர்.
முதல்வர் பதவிக்கு இருவர் அல்ல, நான்கு பேர் போட்டியிடுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவியை முடிவு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், மாநில செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், “டி.கே.சிவகுமார், சித்தராமையா மட்டுமின்றி எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரும் ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வர் குறித்து கட்சியின் உயர்மட்டக் குழுவும், எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் தனது முன்னாள் கட்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் இருப்பதன் மூலம் 'மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
சிபல் தனது ட்விட்டரில், “கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவது கடினமானது. மக்களின் இதயங்களை வெல்வது கடினமானது! அடுத்த 5 ஆண்டுகளுக்கு திறந்த, நேர்மையான, பாரபட்சமில்லாமல் நடந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள், அவரது வீட்டிற்கு வெளியே, அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பதாகைகளை வைத்துள்ளனர்.
முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையா ஆதரவாளர்கள், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பேனர்களை அவரது வீட்டின் முன்பு வைத்துள்ளனர்.
டி.கே சிவகுமார் 60 வயதான கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர், வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். 2020ம் வருடம் இவர் அமலாக்க துறையால், கைது செய்யப்பட்டபோதும், காங்கிரஸ் கட்சி இவருக்கு தலைமை பொறுப்பு வழங்கியது.
” தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்: மக்களின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக முயற்சி செய்தபோதும் எங்களால் வெல்ல முடியவில்லை. முழு முடிவுகள் வந்த பிறகு இது தொடர்பாக முழு ஆய்வு மேற்கொள்ளப்படும்”- பசவராஜ் பொம்மை
1989 தேர்தலுக்கு பிறகு காங்கிரச் கட்சி 136 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
ஜெயநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே குழப்பம் ஏற்பட்டது. இறுதி வாக்கெடுப்பு முடிவுக்காக காத்திருக்கும் ஒரே ஒரு தொகுதி இதுதான். இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆர்.அசோக் மற்றும் தேஜஸ்வி சூர்யா காணப்பட்டதையடுத்து சலசலப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை மீறிய வகையில் தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார், “நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை தொடர்வோம், முடிவெடுப்பது தேசிய தலைமையிடம் விடப்படும்” என்று அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “போரில் வெற்றி பெற்றோம். ஆனால், போரில் வெற்றி பெற வேண்டும். அதனால்தான், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் போரில் வெற்றி பெறுவோம். போரில் வெற்றி பெற்றால்தான் வெற்றி கிடைக்கும். நாடு காப்பாற்றப்படும். இல்லையென்றால், ஒரு மாநிலம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆனால், எல்லா இடங்களிலும் நியாயமான, ஜனநாயக ஆட்சி அமைய வேண்டுமெனில், வரும் தேர்தலில் நாம் மிகப் பெரிய போரை, மிகப் பெரிய போரை எதிர்கொள்ள வேண்டும்.
“இது ஊழலுக்கு எதிரான வெற்றி, இது 40 சதவீத கமிஷனுக்கு எதிரான வெற்றி, இது பணவீக்கத்திற்கு எதிரான வெற்றி… இது காங்கிரஸ் உத்தரவாதத்தின் வெற்றி.” கார்கே கூறினார்
கர்நாடகா காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, ஜனநாயகத்தை காப்பாற்ற கர்நாடகா புதிய மந்திரத்தை வழங்கியுள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழி இது.
“பா.ஜ.க இல்லாத தென்னிந்தியா' உருவாகியுள்ளதை கர்நாடக மக்கள் உறுதி செய்துள்ளனர். பிரிவினைவாத அரசியலுக்கும் வெறுப்பு அரசியலுக்கும் இது ஒரு பதில். ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், வெளிப்படையான மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம், அடுத்த அரசாங்கம் ஒவ்வொரு கன்னடர்களுக்கும் சேவை செய்யும். எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் கூட, என்று சுர்ஜேவாலா கூறினார்
காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கூறியும், இந்த வெற்றியால் பாஜக இல்லாத உருவாக்க முடிந்தது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் என்று நாங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப கூறியிருந்தோம். நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது தேசத்தை உற்சாகப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்-முக்த் பாரதத்தை உருவாக்குவார்கள் என்றும் பாஜக எங்களைக் கேலி செய்தது. ஆனால், இன்றைக்கு உண்மை என்னவென்றால் 'பாஜக-முக்த் தக்ஷின் பாரத்' (பா.ஜ.க இல்லாத பாரதம்). கார்கே மேலும் கூறினார்.
கட்சிக்குள் உள்ள ஒற்றுமை காரணமாகவே கட்சி இவ்வளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்றார். “நாங்கள் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமையால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஒற்றுமையால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டிருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கூறியும், இந்த வெற்றியால் பாஜக இல்லாத உருவாக்க முடிந்தது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் என்று நாங்கள் அனைவரும் திரும்பத் திரும்ப கூறியிருந்தோம். நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது தேசத்தை உற்சாகப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும், காங்கிரஸ்-முக்த் பாரதத்தை உருவாக்குவார்கள் என்றும் பாஜக எங்களைக் கேலி செய்தது. ஆனால், இன்றைக்கு உண்மை என்னவென்றால் 'பாஜக-முக்த் தக்ஷின் பாரத்' (பா.ஜ.க இல்லாத பாரதம்). கார்கே மேலும் கூறினார்.
கட்சிக்குள் உள்ள ஒற்றுமை காரணமாகவே கட்சி இவ்வளவு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்றார். “நாங்கள் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமையால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஒற்றுமையால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டிருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் கொண்டாட்டத்தில் மூழ்கிய நிலையில், மல்லிகார்ஜுன் கார்கே, மாநில கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலத்தை வெளிப்படுத்தினர். சித்தராமையா அல்லது டி.கே.சிவகுமாரா? காங்கிரஸ் கட்சி அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யப்போகிறது என்பதுதான் அனைவரின் பார்வையும்.
திசை திருப்பும் அரசியல் பலிக்காது என்பது நிரூபணமானது என கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் உள்ள சூழ்நிலையை காட்டுவதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்று பவார் கூறினார். பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
“கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். நமது தவறுகளை அலசி ஆராய்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம்” என மாநிலத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் உள்ள சூழ்நிலையை காட்டுவதாக என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக தேர்தல் முடிவுகளின் போக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரும். பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம் என்று சரத் பவார் கூறினார்.
காங்கிரஸ் கட்சி மாலை 5.30 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 113 இடங்கள் தேவை.
ஷிமோகா தொகுதியில் பாஜக தலைவர் சன்னபசப்பா 27,674 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு சன்னபசப்பா கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள காங்கிரஸிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியதற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கமிஷன், மக்கள் மத்தியில் அதிருப்திதான் காரணம் என புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி. தற்போது வரை 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேலும், 22 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை * பாஜக 51 இடங்களில் வெற்றி, 13 இடங்களில் முன்னிலை
கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும்” காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட்
“காந்திஜியைப் போலவே நீங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள்” “வெற்றிக்கு மட்டுமின்றி வெற்றி பெற்ற முறைக்கும் பாராட்டுக்கள்” கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளின் மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது” “இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்” இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி
கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது” – கனிமொழி ட்வீட்
வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்கவைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
கர்நாடக மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தலின் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் ஒன்றினைவோம். இந்தியாவில் மக்கள் ஆட்சியையும் அரசியலமைப்பு விழுமிகளையும் மீட்டெடுப்போம். கர்நாடகத்தில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி”. என்று டெல்லியில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.