முஸ்லிம்களை EWS பிரிவுக்கு நகர்த்தும் கர்நாடகா; வொக்கலிகா, லிங்காயத்துகளுக்கு அதிக இடஒதுக்கீடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில மக்கள் தொகையில், 13 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

Karnataka
Chief Minister Basavaraj Bommai

கர்நாடக அரசு 2பி பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) இடஒதுக்கீடு பிரிவின் கீழ் சேர்க்க வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

4 சதவீத இடஒதுக்கீட்டை மாநிலத்தின் வொக்கலிகா மற்றும் லிங்காயத்து ஆகிய இரண்டு ஆதிக்க சமூகங்கள் பகிர்ந்து கொள்ளும். 2022 டிசம்பரில் உருவாக்கப்பட்ட 2சி பிரிவின் கீழ் சேர்க்கப்பட்ட வொக்கலிகர்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடும், புதிதாக உருவாக்கப்பட்ட 2டி பிரிவின் கீழ் வரும் லிங்காயத்துகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்கும் என அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

லிங்காயத்தின் துணைப்பிரிவான பஞ்சமசாலிஸ், லிங்காயத் சமூகத்தினருக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீடு துணைப்பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று கூறி பெரிய இடஒதுக்கீடு கோரி வருகின்றனர்.

தேவகவுடா முதலமைச்சராக இருந்தபோதுதான், அரசு வேலைகளில் சமூகத்தின் மோசமான பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களுக்கு 2பி பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில மக்கள் தொகையில், 13 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

மத சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என்றார் பொம்மை. மத சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்பதால், நாங்கள் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம்.

இப்போது முஸ்லிம்கள் 2B இன் கீழ் 4 சதவீத தொகுப்பிலிருந்து 10 சதவீத பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) தொகுப்புக்கு மாற்றப்படுவார்கள், அங்கு சமூகத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். EWS ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவும் இருக்காது, மற்ற இடஒதுக்கீடு மூலம் பயனடையாத அனைத்து சமூகங்களும் இதற்கு தகுதியுடையவர்கள்.

எவ்வாறாயினும், வகை 1 இன் கீழ் பிஞ்சாரா, நடாஃப் மற்றும் பிற 12 முஸ்லிம் துணை சாதிகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது, இந்த பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வளர்ச்சிக்காக அரசு வாரியம் அமைக்கும் என்று பொம்மை கூறினார்.

சுமார் 101 பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான 17 சதவீத ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீட்டையும் அமைச்சரவை அனுமதித்தது.

மடிகாஸ் உட்பட 29 சமூகங்களைக் கொண்ட SC இடது பிரிவினர் 6 சதவீத ஒதுக்கீட்டைப் பெறுவார்கள், அதேசமயம், ஹோலியாஸ் போன்ற சுமார் 25 சமூகங்களைக் கொண்ட SC வலது பிரிவினர் 5.5 சதவிகிதத்தைப் பெறுவார்கள்.

பஞ்சாராஸ் மற்றும் போவிஸ் போன்ற சமூகங்களுக்கு ஒதுக்கீட்டில் 4.5 சதவீதமும், அந்த பிரிவில் உள்ள மற்ற சமூகங்களுக்கு மீதமுள்ள 1 சதவீதமும் கிடைக்கும். மாநில அரசு 2022 அக்டோபரில் எஸ்சி இட ஒதுக்கீட்டை 15லிருந்து 17 சதவீதமாகவும், எஸ்டி ஒதுக்கீட்டை 3லிருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தியது நினைவிருக்கலாம்.

இடஒதுக்கீடு மாற்றம் குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என பொம்மை தெரிவித்தார்.

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் புதிய இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேசி மதுசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka ews quota vokkaliga lingayat karnataka muslims

Exit mobile version