Karnataka Exit Polls 2023 : 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Advertisment
அதன்படி நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணப்பில் பா.ஜ.க.வுக்கு 114 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 86 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குமாரசாமி கட்சிக்கு 21 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரிபப்ளிக் டிவி, பிமார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதாவுக்கு 85-100 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 94-108 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 14-24 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வர்ணா நியூஸ் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 94-117 இடங்களும், காங்கிரஸிற்கு 91-106 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 14-24 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மூலம் 2018ஆம் ஆண்டைப் போல் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ்-பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக செயல்படுவார் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
மேலும் ஏபிபி சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 66-86 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 81-101 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 20-27 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“