ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீது முதலில் நடவடிக்கை... பின்பு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு... - காங்கிரஸ் கோரிக்கை!

இந்திய அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு தன்னுடைய கடமைகளை முறையாக செய்வேன் - சபாநாயகர் ரமேஷ் குமார்

 Ananthakrishnan G

Karnataka Floor test today 15 MLAs resignation : இன்று கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில்,  நேற்று மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர்.  அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். விரைவாக கடிதங்களை ஏற்றுக் கொள்ள உத்தரவிட கோரிக்கை விடுத்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சபாநாயகருக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒரு முடிவை எடுக்க நிர்பந்திக்க முடியாது என்றும் அதேபோன்று சபாநாயகர் ரமேஷ்குமார் இந்த 15 எம்.எல்.ஏ-க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வலியுறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

கர்நாடக சட்டசபை

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 117 இடங்களை பெற்றிருந்தது.  இந்த கூட்டணியை சேர்ந்த 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ -க்கள் மற்றும் மஜத கட்சியின் 3 எம்.எல்.ஏக்களிம் தங்கள் பதவியை ஜூலை 6ம் தேதியன்று ராஜினாமா செய்தனர்.  பாஜக ஏற்கனவே 105 இடங்களை பெற்றிருந்தது.  பெரும்பான்மையை நிரூபிக்க 113 இடங்களை பெற்றவர்களால் தான் ஆட்சி அமைக்க இயலும். சபாநாயகர் இந்த 15 நபர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் கூட்டணியின் பலம் குறையும் மேலும் பெரும்பான்மைக்கான இடங்களும் குறையும். இந்த நிலையில் இன்று முதல்வர் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : 

நேற்றைய தீர்ப்பு

இது போன்ற சூழலை சரிசெய்ய மிகவும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை அந்த முடிவு என்பது, சபாநாயகர் அந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து முறையான நேரத்தில், சரியான முடிவினை விரைவாக எடுப்பதே ஆகும் என்று நாங்கள் கருதுகிறோம்.  இந்திய அரசியல் சாசனம் 190ன் கீழ் உள்ள அதிகாரம் 202 மற்றும் இந்திய அரசியல் சாசனம் 208ன் படி கர்நாடகாவின் அரசியல் சூழல் அறிந்து, ராஜினாமாவை ஏற்பது குறித்து முறையான முடிவுகளை எடுக்க சபாநாயகருக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது என்று நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

மேலும் அந்த தீர்ப்பில் 15 எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 எம்.எல்.ஏக்கள் ராஜினமாவை ஏற்றுக் கொண்டு தகுதி நீக்கம் செய்வதா, அல்லது கட்சி தாவல் தடை சட்டத்தில் கீழ் தகுதி நீக்கம் செய்வதா என்பது தொடர்பான தெளிவான முடிவுகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்ற சபாநாயகர் ரமேஷ் குமார், இந்திய அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு தன்னுடைய கடமைகளை முறையாக செய்வேன் என்று கூறியுள்ளார்.

பெரும்பான்மை கோரி இன்று காலை சட்டசபையில் பேசினார் கர்நாடக முதல்வர். பிறகு, மக்களுக்கான ஆட்சியை தருவதற்கு இந்த அரசு சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றார்கள் என்று பேசினார் அவர். காங்கிரஸ் கட்சியினர், 15 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை முதலில் எடுத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close