கொரோனா: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை - கர்நாடகா அரசு அறிவிப்பு
கர்நாடகா அரசு, நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் பிளாஸ்மா தானம் செய்ய ரூ.5,000 ஊக்கத்தொகை அளிப்பதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.
கர்நாடகா அரசு, நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் பிளாஸ்மா தானம் செய்ய ரூ.5,000 ஊக்கத்தொகை அளிப்பதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.
கர்நாடகா அரசு, நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் பிளாஸ்மா தானம் செய்ய ரூ.5,000 ஊக்கத்தொகை அளிப்பதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.
Advertisment
இது குறித்து கர்நாடகா அரசால் வெளியிடப்பட்ட உத்தரவில் “கொரோனா தொற்றில் இலிருந்து 14-28 நாட்களுக்குள் குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளது.
கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் புதன்கிழமை கூறுகையில், “பிளாஸ்மா நன்கொடையாளருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து தானாக முன்வந்து பிளாஸ்மாவை நன்கொடை அளித்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுங்கள்.” என்று கூறினார்.
Advertisment
Advertisements
இதுவரை கர்நாடகாவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட ஐந்து கோவிட் -19 நோயாளிகளில், 3 பேர் குணமடைந்தனர் என்றும் மற்ற 2 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் கே சுதாகர், “பிளாஸ்மா பரிமாற்றம் அதிக அளவில் செயல்படுகிறது. நாங்கள் நிரூபிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்குவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளோம்” என்று கூறினார்.
கர்நாடகாவில் புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 3,176 என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 47,253 ஆகக் உயர்ந்துள்ளது. கர்நாடகா சுகாதாரத் துறை அறிவிப்பின்படி, கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த 1,076 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். அதே நேரத்தில், கொரோனா பாதிப்பால் புதன்கிழமை மட்டும் 87 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 18,466 நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை மொத்தம் 928 பேர் இறந்துள்ளனர். மேலும், அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27,853 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 597 தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கர்நாடகா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பொதுமுடக்க காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை பெங்களூரு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கழகம் (பி.எம்.டி.சி), பெங்களூருவில் கோவிட்-19 பொதுமுடக்க காலத்தில் பணிபுரிந்த 3,000க்கும் மேற்பட்ட அதன் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.250 என்று ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
பெங்களூரு நகரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக பணிபுரிபவர்களுக்கு பேருந்து சேவைகளை வழங்க மார்ச் 26 முதல் ஏப்ரல் 20 வரை பணியாற்றிய 3,397 ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பி.எம்டிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"