Advertisment

ஊட்டச்சத்து குறைபாடு: பள்ளி மதிய உணவில் முட்டை வழங்கும் கர்நாடக அரசு… மத தலைவர்கள் எதிர்ப்பு

கர்நாடகாவில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட 7 மாவட்டங்களில், மதிய உணவு திட்டத்தில் வேகவைத்த முட்டைகளை வழங்க கர்நாடக அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது. முட்டை வழங்கும் திட்டத்திற்கு மத தலைவர்கள், ஜைன மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Karnataka govt starts to provide eggs to malnourished school kids, malnourished school kids, கர்நாடகா, ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளி மதிய உணவில் முட்டை வழங்க தொடங்கிய கர்நாடக அரசு, மத தலைவர்கள் எதிர்ப்பு, Karnataka, seers oppose karnataka govt starts provide eggs in mid day meal, karnataka seers

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட 7 மாவட்டங்களில், மதிய உணவு திட்டத்தில் வேகவைத்த முட்டைகளை வழங்க கர்நாடக அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

Advertisment

முன்னதாக, கர்நாடக அரசு பள்ளிகளில் முட்டைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. ஆனால் பயனில்லை.

கல்யாண கர்நாடகாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளை அறிமுகப்படுத்தும் கர்நாடக அரசின் முடிவுக்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு மடங்களின் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உடுப்பியில் உள்ள ஸ்ரீ பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள், குழந்தைகளை முட்டை சாப்பிடுமாறு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று வியாழக்கிழமை கூறினார். மேலும் அவர், “உணவு என்பது தனிநபர்களின் விருப்பம், அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கென்று தனி உணவுப் பழக்கம் உள்ளது. அரசாங்கத்தின் வேலை குழந்தைகளை முட்டை சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்துவது அல்ல. அதற்குப் பதிலாக, அரசு முட்டை வாங்குவதற்குச் செலவிடும் பணத்தை மாணவர்களுக்கு அளிக்கட்டும். பள்ளிகளில், அனைத்து சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இருப்பார்கள். முட்டை சாப்பிடுவதை அரசு கட்டாயமாக்கக் கூடாது.” என்று கூறினார்.

மாநிலத்தில் ஏறக்குறைய 3.5 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக அரசின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட பிதார், ராய்ச்சூர், கலபுர்கி, யாத்கிர், கொப்பல், பல்லாரி மற்றும் விஜயபுரா ஆகிய 7 மாவட்டங்களில் மதிய உணவு திட்டத்தில் வேகவைத்த முட்டைகளை வழங்க பாஜக அரசு முடிவு செய்தது.

இந்த மாவட்டங்களில் 14.4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில், “டிசம்பர் 1, 2021 முதல் மார்ச் 30, 2022 வரை, 7 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 322 மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும். முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படும். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு முட்டை அல்லது வாழைப்பழம் ஒன்றின் விலை ரூ.6 என்ற அளவில் மாதத்தில் 12 முட்டை/வாழைப்பழங்கள் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

லிங்காயத் தர்ம மகாசபையின் தேசியத் தலைவரான லிங்காயத் மடத் தலைவர் சன்ன பசவானந்த சுவாமியும் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார். “குழந்தைகள் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அணிந்து, ஒரே பாடத்திட்டத்தைப் படிக்கும் சீரான தன்மைதான் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு. பிறகு, ஏன் உணவில் பாரபட்சம் காட்ட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். பாகுபாடு இன்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உணவுகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஜைன மதத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஜைன மடத்தின் சீடர் பட்டரக சாருகீர்த்தி சுவாமி வலியுறுத்தியுள்ளார். அவர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், சைவ உணவை மட்டுமே உண்ணும் சிறுபான்மை ஜைன மக்களை அரசின் இந்த முடிவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவர் இந்த கடிதத்தில், “சில குழந்தைகள் பிறப்பிலேயே சைவ உணவு உண்பவர்கள். அரசு பள்ளிகளில் அசைவ உணவு வழங்குவதால் பள்ளிகளில் நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. முட்டை வழங்குவதற்கு பதிலாக, மாநில அரசு குழந்தைகளுக்கு பருப்பு, பாதாம், பால் மற்றும் பழங்களை வழங்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளார்.

இதனிடையே, ஹுப்பள்ளி-தார்வாட் மேற்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் மடத் தலைவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை மேம்படுத்த வேறு வழிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். “மாணவர்களை முட்டை சாப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது. ஊட்டச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்த, ஊட்டச்சத்து நிறைந்த பிற உணவுகளை அரசு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Karnataka Karnataka State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment