கர்நாடகாவில், 33 அமைச்சர்களுக்கு தலா ரூ.30 லட்சம் செலவில் புதிய சொகுசு கார்: ரூ.10 கோடி ஒதுக்கீடு
இந்தக் கார்கள் 1999 கர்நாடக வெளிப்படைத்தன்மை விதியின் கீழ் ஜிஎஸ்டி உள்பட எக்ஸ்-ஷோரூம் விலையில் டொயோட்டா கிர்லோஸ்கர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கப்பட உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து தேர்தலின்போது வாக்குறுதியாக அளித்த 5 திட்டங்களில் மகளிர் நிதி உதவி ரூ.2000 முதல் இலவச அரிசி வரை முதல் நான்கு திட்டங்களை நிறைவேற்றினார்கள்.
Advertisment
படித்த இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், அமைச்சர்களுக்கு கார் வாங்கும் திட்டத்துக்கு மாநில முதல் அமைச்சர் சித்த ராமையா ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, ரூ.9.9 கோடியே 33 புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மல்டி யூட்டிலிட்டி வாகனங்களை வாங்க கர்நாடக காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆக.29ஆம் தேதி நிதித்துறை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அன்றைய தினமே துறையின் துணைச் செயலர் ஒப்புதல் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், 999 கர்நாடக வெளிப்படைத்தன்மை விதியின் கீழ் ஜிஎஸ்டி உள்பட எக்ஸ்-ஷோரூம் விலையில் டொயோட்டா கிர்லோஸ்கர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கப்பட உள்ளன. இதில் ஒரு காரின் மதிப்பு ரூ.33 லட்சம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“