/indian-express-tamil/media/media_files/e3zjfmP1r5M09ChssyXe.jpg)
பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவான ஜே.டி. (எஸ்) எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கைது வாரண்டின் அடிப்படையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: Karnataka govt writes to MEA seeking cancellation of Prajwal Revanna’s diplomatic passport: Sources
பாலியல் வன்கொடுமை குற்றங்களின் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள் வெளியானதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், ஜே.டி(எஸ்) எம்.பி தூதரக பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
ஜே.டி.(எஸ்) எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் வந்துள்ளது. இது செயலாக்கப்பட்டு வருகிறது” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
பிரஜ்வாலின் தூதர்க பாஸ்போர்ட்டை ரத்து செய்ய விரைவான மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் எழுதிய முந்தைய கடிதத்தில், நிலைமையின் தீவிரம் இருந்தபோதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அதிருப்தி அளிக்கிறது என்றார். “பிரஜ்வால் ரேவண்ணா செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கடுமையான சம்பவங்களின் தொடர் கவனத்தை ஈர்க்க நான் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எழுதுகிறேன். இந்த சம்பவங்கள் கர்நாடக மாநில மக்களின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி, நாடு தழுவிய கவலையையும் ஏற்படுத்தியுள்ளது” என்று மே 22-ம் தேதி பிரதமருக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது என்று செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
“தற்போது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரன்ட்டின் அடிப்படையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.