karnataka | high-court: இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் தொடங்கிய முதல் பல உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைகளை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடை விசாரணையை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பியது. அரசியல் சாசன வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது அதுவே முதல் முறையாக இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Obscene videos played, Karnataka HC suspends live streaming
இந்நிலையில், டிசம்பர் 4 அன்று குறைந்தது 6 கர்நாடக உயர்நீதிமன்ற அறைகளில் வீடியோ கான்பரன்சிங் விசாரணையின் போது ஆபாச வீடியோ பார்க்கப்பட்டதாக அறியப்படுகிறது. இதேபோல், நேற்று செவ்வாய்கிழமை காலை 2 உயர்நீதிமன்ற அறையில் நடந்த வீடியோ கான்பரன்சிங் விசாரணையின் போது ஆபாச வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு விசாரணைகளின் போது ஆபாசப் படங்கள் பார்க்கப்பட்டதால் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்படும் வசதியை கர்நாடக உயர் நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
“ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நாங்கள் நிறுத்துகிறோம்” என்று தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, மத்தியப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் (கணினிகள்) சுரேஷ், சைபர் கிரைம் போலீஸை அணுகி, நீதிபதிகளின் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தெரியாத சிலர் வீடியோ கான்பரன்ஸில் சேர்ந்து, “தவறாக நடந்துகொண்டதாகவும், ஆபாசமான காட்சிகளைக் காட்டுவதாகவும்” குற்றம் சாட்டி இருந்தார். தற்போது இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“