கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தநிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நடக மாநில அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததோடு சீருடை பரிந்துரைக்கப்படும் என்று பிப்ரவரி 5ம் தேதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வும், மாநிலத்தின் உடுப்பி பகுதியில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் வகுப்பறைகளுக்குள் சீருடையுடன் ஹிஜாப் அல்லது தலையில் முக்காடு அணிய உரிமை கோரி தாக்கல் செய்த மனுக்களை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான முழு அமர்வும் தனது உத்தரவில், “முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்.
“பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கக்கூடிய நியாயமான கட்டுப்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது” என்று நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே.எம். காசி ஆகியோர் அடங்கிய முழு அமர்வு கூறினர்.
கர்நடக மாநில அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததோடு சீருடை பரிந்துரைக்கப்படும் என்று பிப்ரவரி 5ம் தேதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பிப்ரவரி 5, 2022 அன்று ஹிஜாப் அணிய தடை செய்து அரசாங்கம் உத்தரவை வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். மேலும், அது செல்லுபடியாகாது என்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
இந்த பிரச்னையில் முழுமையான பார்வையை எடுத்துக் கொண்டதாகவும், பதிலளிக்க வேண்டிய நான்கு கேள்விகளை உருவாக்கியதாகவும் நீதிமன்றம் கூறியது. “முழு விஷயத்தையும் ஒரு முழுமையான பார்வையில் நாங்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளோம். அதற்கேற்ப நாங்கள் பதிலளித்துள்ளோம். அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் இஸ்லாமிய நம்பிக்கையில் ஹிஜாப் அணிவது அல்லது தலையில் முக்காடு அணிவது அவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக உள்ளதா? நீதிமன்றம் கூறியது.
மேலும், “இரண்டாவது கேள்வி என்னவென்றால், அரசியலமைப்பின் 191 ஏ பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான பிரிவு 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்ற மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பள்ளிச் சீருடை பரிந்துரைக்கப்படுவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்பதுதான். மூன்றாவது கேள்வி என்னவென்றால், பிப்ரவரி 5, 2022 தேதியிட்ட அரசு ஆணை தேவையற்றது என்பதைத் தவிர, அது தன்னிச்சையானதா, எனவே அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது பிரிவுகளை மீறுகிறதா?” என்று கூறினர்.
“கடைசி கேள்வி என்னவென்றால், 6 முதல் 14 வரையிலான எதிர்மனுதாரர்களுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடவும், 15 மற்றும் 16-க்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கவும் ஒரு மனுவில் ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா” என்று உயர்நீதிமன்றம் கூறியது.
“முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையை உருவாக்கவில்லை” என்றும், “பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது என்பது அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடு, அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது”, “கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து பிப்ரவரி 5, 2022 தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையைப் பிறப்பிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த அரசாணை செல்லுபடியாகாததற்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தியதற்காக கல்லூரி அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கான மனுவையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
“நான்காவது கேள்விக்கான பதில், ரிட் மனு 2146/2022 இல் ஆறு முதல் 14 வரையிலான பிரதிவாதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடங்குவதற்கும், 15 மற்றும் 16 க்கு எதிராக ரிட் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையைப் பிறப்பிப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பராமரிக்க முடியாதது என நீதிபதிகள் அமர்வு கூறியது.
உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். “உயர் நீதிமன்ற உத்தரவை அனைத்து மாணவர்களும் பின்பற்ற வேண்டும். வகுப்புகள் அல்லது தேர்வுகளை புறக்கணிக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
கர்நாடகா உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை அளித்த தீர்ப்பில், மாணவர்களுக்கு சீருடை பரிந்துரைக்கப்படுவது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில், வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“