scorecardresearch

ஹிஜாப் எதிர்ப்பு மாவட்டத்தில்… அரசுப் பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்கள் சேர்க்கை 50% சரிவு

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடந்த உடுப்பி மாவட்டத்தில், முஸ்லிம் மாணவர்கள் கணிசமான அளவில் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்ற தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைத்துள்ளது.

hijab ban, Karnataka hijab case, Hijab row, Karnataka news, Udupi, minority students, Muslim students, Indian Express, India news, current affairs

மேல்நிலை பள்ளிக் கல்வியில் (பி.யூ.சி) ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் கர்நாடகாவின் உத்தரவு, தேர்வு வருகையையோ அல்லது பெண்களின் சேர்க்கையையோ பாதிக்காமல் இருக்கலாம். ஆனால், அம்மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடந்த உடுப்பி மாவட்டத்தில், முஸ்லிம் மாணவர்கள் கணிசமான அளவில் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்ற தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைத்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைத்த தகவல்களின்படி, உடுப்பியில் உள்ள அனைத்து பி.யூ.சி கல்லூரிகளிலும் 11-ம் வகுப்பில் (கர்நாடகாவில் 11-ம் வகுப்பு ஃபர்ஸ்ட் பி.யூ.சி அல்லது பி.யூசி I என கூறுகிறார்கள்) நுழையும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ல் 1,296 மாணவர்கள், 2022-2023-ல் – 1320 மாணவர்கள் என ஒரே மாதிரியாக இருக்கிறது. அதே நேரத்தில், அரசு பி.யூ.சி-களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானதாக பதிவாகியுள்ளது. (விளக்கப்படத்தைப் பார்க்கவும்).

புள்ளிவிவரங்களின்படி, 2021-22 கல்வி ஆண்டில் 388 முஸ்லிம் மாணவர்கள் பி.யூ.சி – I வகுப்பு சேர்க்கப்பட்டனர். அதற்கு பிறகு, 2022-23-ம் கல்வி ஆண்டில் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.சி-களில் 186 முஸ்லிம் மாணவர்கள் பி.யூ.சி – I வகுப்பு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், 2021-22 கல்வி ஆண்டில் அரசு கல்வி நிறுவனங்களில் பி.யூ.சி – I வகுப்பில் 17 முஸ்லிம் மாணவிகள் சேர்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக, இந்த கல்வி ஆண்டில் 91 முஸ்லிம் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 210-ல் இருந்து 95-ஆக குறைந்துள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள தனியார் அல்லது அரசு உதவி பெறாத) பி.யூ.சி கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பால் இந்த வீழ்ச்சி ஈடுசெய்யப்படுகிறது. 2021-22-ல் அரசு உதவி பெறாத கல்லூரிகளில் 662-ஆக இருந்த முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை, 2022-23-ல், முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கை 927 ஆக அதிகரித்துள்ளது. இதில், மேலும், முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கை 334 இருந்து 440 ஆகவும், முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 328 இருந்து 487 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கு உடுப்பியில் உள்ள சாலிஹாத் பி.யூ.சி கல்லூரி ஒரு உதாரணம். இந்த தனியார் நிறுவனத்தில், 2021-22ல் பி.யூ.சி – I வகுப்பு (11-ம் வகுப்பு) முஸ்லிம் மாணவிகளின் சேர்க்கை 30 ஆக இருந்தது. 2022-23-ல் 57 பேர் சேர்ந்துள்ளனர். சாலியாத் கல்விக் குழுமத்தின் நிர்வாகி அஸ்லம் ஹைகாடி கூறுகையில், “எங்கள் பி.யூ. கல்லூரியில் முதன்முறையாக முஸ்லிம் பெண்களின் சேர்க்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஹிஜாப் விவகாரம் உண்மையில் தனிப்பட்ட முறையிலும் கல்வி ரீதியாகவும் அவர்களை எவ்வாறு பாதித்தது என்பதற்கு இது ஒரு சான்று.” என்று கூறினார்.

மற்றொரு தனியார் கல்வி நிறுவனமான அலிஹ்சன் பி.யு. கல்லூரியின் முதல்வர் ஹபீப் ரஹ்மான் கூறுகையில், “மாணவர்களிடமும் இந்த போக்கு காணப்படுகிறது, பெற்றோர்கள் ஹிஜாப் குறித்து எந்த ஒரு போராட்டத்திலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இருக்கலாம். உடுப்பியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிகளில் ஹிஜாப் வகுப்புவாதத்தையும் அரசியலாக்குவதையும் கருத்தில் கொண்டு, இந்த கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பெற்றோர்கள் முடிவு செய்திருக்கலாம்.” என்று கூறினார்.

கர்நாடகாவின் பள்ளிக் கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷை தொடர்பு கொண்டபோது, “மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது, அவர்களின் மதம், ஜாதி அல்லது மதம் எதுவாக இருந்தாலும் ஒட்டுமொத்த மாணவர்களின் போக்கைப் பார்க்கிறோம். நாங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மாணவர்களின் பிரிவையோ தனிமைப்படுத்தி அவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை மதிப்பிட மாட்டோம். இறுதியில், அனைத்து மாணவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய விரும்புகிறோம். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அரசு பி.யூ. கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இருப்பினும், உடுப்பி அரசு கல்லூரிகளில் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் சரிவு இருந்தால், அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka hijab protest district over 50 per cent dip in minority students count in govt pucs