கண்ணன் கோபிநாதனை தொடர்ந்து -தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸில் பொறியியல் பட்டம் பெற்றவர்

By: Updated: September 6, 2019, 04:27:24 PM

தட்சிணா கன்னட துணை ஆணையராக இருக்கும்  (டி.சி) சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமையன்று  இந்திய குடிமைப் பணி சேவையிலிருந்து (ஐ.ஏ.எஸ்) பதவி விலகினார்.

சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள ராஜிநாமா கடித்ததில்  இந்த முடிவு தனது தனிப்பட்ட விருப்பத்தால் எடுக்கப்பட்டதென்றும், தற்போது இருக்கும் துணை ஆணையர் பதவிக்கும்-  தனது பதவி விலகலுக்கும் எந்த சமந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், அவரது ராஜிநாமா கடிதத்தில் ” ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் சமரசம் செய்யப்படும்போது, அரசாங்கத்தில் ஒரு அரசு ஊழியராக கடமையில் தொடர்வது நெறிமுறையற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“வரவிருக்கும் நாட்கள் நம் தேசத்தின் அடிப்படை அடையாளங்களையும், சித்தாந்தங்களையும் கடும் சவால்களை சந்திக்கப் போவதால், ஐ.ஏ.எஸ் பணியை விட்டு  வெளியே சென்றால் தான் அனைவருக்கும் சிறந்த வாழ்கையைக் கொடுக்க என்னால் போராட முடியும்” என்றும் எழுதியிருந்தது .

செந்திலின்,  ராஜினாமா கடிதத்தில் கூறப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராயுமாறு கர்நாடக முதலமைச்சர் யெடியூரப்பா தனது தலைமை செயலாளர் டி.எம்.விஜய் பாஸ்கருக்கு உத்தரவிட்டார்.

2009  கர்நாடக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான செந்தில், ஜூன் 2017 அன்று தட்சிணா கன்னட துணை ஆணையராக பதிவி ஏற்று தனது சுறுசுறுப்பான நடவடயுக்கைகளால் அனைவரும் கவர்ந்தவர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸில் நிபுணத்துவம் பெற்ற பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார்.

கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன்  தாத்ரா மற்றும் நகர் ஹவேலி நிர்வாகி சில நாட்களுக்கு முன் தனது  பணியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Karnataka ias officer sasikanth senthil step down citing indian democracy crisis

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X