Karnataka issues notices to Cipla, Jubilant : சிப்லா மற்றும் ஜூப்பிலண்ட் மருந்து நிறுவனங்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கர்நாடக அரசு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மாநில அரசு கேட்ட அளவு மருந்துகளை முழுமையாக விநியோகிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அம்மாநில பேரிடர் மேலாண்மை குழுமத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும், செயலாளர் என். மஞ்சுநாத் பிரசாத் இந்த நோட்டீஸை விடுத்துள்ளார். மத்திய அரசால் கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளை 24 மணி நேரத்திற்குள் உடனே விநியோகிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எப்போது ஆக்ஸிஜன் விநியோகம் துவக்கம்?
இந்திய அரசால் கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் வழங்க தவறிவிட்டன. இதனால் அம்மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிப்லா நிறுவனம் 30 ஆயிரம் குப்பிகளையும், ஜூபிலண்ட் 32 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளையும் மே 1ம் தேதிக்குள் கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் சிப்லா இதுவரையில் (மே 8 வரை) 10,480 குப்பிகளையும், ஜூபிலண்ட் 17,601 குப்பிகளையுமே வழங்கியுள்ளது என்று அந்த நோட்டீஸில் ப்ரசாத் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மாநிலத்திற்கு தேவையான அளவில் உறுதி செய்யப்பட்டரெம்ட்சிவிர் குப்பிகளை வழங்காதது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான நேரத்தில், பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்கான மாநிலத்தின் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது, இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே 2153 நபர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மொத்த பலி எண்ணிக்கை 1907 ஆக இருந்தது. கடந்த வருடம் கொரோனா தொற்று உச்ச நிலையில் இருக்கும் போது 971 நபர்கள் உயிரிழந்தனர். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பெங்களூர் மாநகரில் ஏற்பட்டு வருகிறது.
இன்றுவரை, கர்நாடகாவில் 20.13 லட்சத்திற்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் 18,776 தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மட்டும் 10.1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 7267 நபர்கள் இறந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil