கர்நாடகா இடைக்கால சபாநாயகர் போப்பையாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி : வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்யவும் உத்தரவு

கர்நாடகா தற்காலிக சபாநாயகரை எதிர்த்த வழக்கு விசாரணை முடிவுதான் அடுத்தகட்ட அரசியலை தீர்மானிக்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணை LIVE UPDATES

கர்நாடகா தற்காலிக சபாநாயகரை எதிர்த்த வழக்கு விசாரணை முடிவுதான் அடுத்தகட்ட அரசியலை தீர்மானிக்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணை LIVE UPDATES

கர்நாடகா அரசியல் குழப்பம் ஓய்ந்தபாடில்லை. முதல் அமைச்சர் எடியூரப்பா இன்று (மே19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். முன்னதாக நேற்று உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ. கே.ஜி.போப்பையாவை நியமனம் செய்து ஆளுனர் வாஜூபாய் வாலா உத்தரவிட்டார்.

கர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று (மே 19) விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பான LIVE UPDATES

பகல் 12.00: காங்கிரஸ் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘வெளிப்படைத் தன்மையே முக்கிய நோக்கம். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது. இது மேலும் எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. காங்கிரஸ்- மஜத-வுக்கே வெற்றி என்பதில் சந்தேகமில்லை’ என குறிப்பிட்டார்.

பகல் 11.30 : காங்கிரஸ் – மஜத சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான கபில் சிபல், ‘சபாநாயகர் போப்பையா எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை எதிர்க்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதைத்தான் எதிர்க்கிறோம்’ என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‘தற்காலிக சபாநாயகர் நியமனம் தவறானது எனில், நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க நேரிடும்.’ என குறிப்பிட்டனர். அதன் பிறகே போப்பையா தொடர்வார் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பகல் 11.15 : வழக்கு விசாரணையின் போது காங்கிரஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், ‘தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறப்பட்டுள்ளது. போப்பையா நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது’ என்றார்.

காலை 11.05 : ‘அனைத்து ஊடகங்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்து கொள்ளலாம். வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் சட்டப்பேரவையில் நடக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலை : 11 00:  கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார். கர்நாடக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காலை 10.30 : தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போப்பையாவுக்கு எதிராக காங்கிரஸ்-மஜத தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

காலை 9.50: கர்நாடகா தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போப்பையா நியமனத்தை எதிர்த்த வழக்கு காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.45 : கர்நாடகா சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஷ்பாண்டே-தான் சீனியர்! 8 முறை தேர்வு செய்யப்பட்ட அவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யாமல், 4 முறை தேர்வு செய்யப்பட்ட போப்பையாவை தேர்வு செய்ததையும் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட இருக்கிறது காங்கிரஸ்!

காலை 9.30 : பாஜக எம்.எல்.ஏ.வான கே.ஜி.போப்பையா ஏற்கனவே 2008-ம் ஆண்டு எடியூரப்பா ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தற்காலிக சபாநாயகராக இருந்தவர்! 2011-ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ஆட்சிக்கு எதிராக திரும்பிய பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரை சபாநாயகராக இருந்து தகுதி நீக்கம் செய்தார் போப்பையா.

கே.ஜி.போப்பையாவின் அந்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்ததுடன் சபாநாயகர் நடவடிக்கை தொடர்பாக விமர்சனங்களையும் வைத்தது. இதை சுட்டிக்காட்டி கே.ஜி.போப்பையா நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதிட இருக்கிறது காங்கிரஸ்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close