Advertisment

பாபர் மசூதி கலவரம் நடந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு கைது- பழைய வழக்குகளை கையில் எடுக்கிறதா கர்நாடகா காங்கிரஸ்?

நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ‘வழக்கமாக’ கைது செய்யப்படுவதாக காவல்துறை கூறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Babri riots

Karnataka man held 31 years after Babri riots, BJP alleges Congress govt reopening old cases

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

31 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் கோயில் போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஒருவரை போலீஸார் கைது செய்ததை அடுத்து, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு பாபர் மசூதி இடிப்பு தொடர்பான பழைய வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பத்தாக பாஜக செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது.

Advertisment

60 வயதான ஸ்ரீகாந்த் பூஜாரி, "நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான" வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, டிசம்பர் 5, 1992 அன்று அப்பகுதியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து கலவரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரில் பூஜாரியும் அடங்குவார்.

அவரது மகன் மஞ்சுநாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை சில போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வந்து என் தந்தையை அழைத்து சென்றனர். சில வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். அவருடன்  நானும் காவல் நிலையம் சென்றேன். இது 1992ல் நடந்த கலவரத்துடன் தொடர்புடையது என்பதை அங்கு அறிந்தேன். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பூஜாரி, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக கூறினார்.

இந்த கைது  நடவடிக்கையை கண்டித், பாஜக தலைவரும், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா, இந்து ஆர்வலர்களை காங்கிரஸ் "பயங்கரவாதப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு 31 ஆண்டுகால வழக்கை மீண்டும் திறக்கிறது. அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகத்தின் வரலாற்று நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில், ராமர் கோவில் போராட்டத்தில் பங்கேற்தற்காக மக்கள் துன்புறுத்தப்படுவது  போன்ற தோற்றத்தை இது அளிக்கிறது, என்று அசோகா பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

விஷ்வ இந்து பரிஷத் ஹுப்பள்ளி பிரிவு தலைவர் சஞ்சு படேஸ்கர், இந்த கைது இந்து ஆதரவாளர்களை கைது செய்வதற்கான அரசின் சதியே தவிர வேறல்லை. இந்த சம்பவம் 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, அவர்கள் இது வரை கவலைப்படவில்லை, என்று கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட 38 பேரில் பூஜாரியும் உள்ளதாக ஹுப்பள்ளி-தர்வாட் போலீஸ் கமிஷனர் ரேணுகா சுகுமார் தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை களைவதற்காக காவல் துறையினரால் வழக்கமாகக் கைது செய்யப்படுவது வழக்கம். எங்களிடம் 150 நீண்டகால வழக்குகள் நிலுவையில் உள்ளன, மேலும் போதைப்பொருள் கடத்தல் உள்பட பிற 37 பல்வேறு வழக்குகளில் 38 பேரைக் கைது செய்தோம்.

வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததால் பூஜாரியும் கைது செய்யப்பட்டார். பூஜாரிக்கு எதிரான வழக்கு 2006 இல் இருந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது, என்று ரேணுகா கூறினார்.

காவல்துறையின் கூற்றுப்படி, டிசம்பர் 5, 1992 அன்று கலவரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட 11 பேரில், மூன்று பேர் இறந்து விட்டனர், மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், பூஜாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜக தொண்டர்கள் மற்றும் பிற இந்து ஆதரவாளர்கள் அவரை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். திங்களன்று, பாஜக எம்எல்ஏ மகேஷ் தெங்கினகாய், ஹுப்பாலியில் உள்ள பூஜாரியின் குடும்பத்தைச் சந்தித்து, இந்த வழக்கில் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

Read in English: Karnataka man held 31 years after Babri riots, BJP alleges Congress govt reopening old cases

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment