கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் 32 வயதான நபர் மனைவியின் காதலன் கழுத்தை அறுத்த அவரது ரத்தத்தை குடித்த கணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவை சேர்ந்த விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் குடியேறியுள்ளனர். மண்டியம்பேட்டை என்ற பகுதியில் வசித்து வந்த இவர்கள், சமையல் எண்ணெய், துணிகள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த மரேஷ் என்பர் சொந்தமாக ஒரு டாடா ஏஸ் வைத்து அதை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். மேலும் இவரின் டாடா ஏஸ் வாகனத்தை விஜய் அடிக்கடி வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக விஜய் - மரேஷ் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், விஜயின் மனைவியுடன் மரேஷ் நெருங்கி பழகியுள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் அதிகரித்து வந்த நிலையில், விஜய் மனைவியும் மரேஷூம் செல்போனில் அதிகம் பேசி வந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட விஜய் தனது மனைவி மற்றும் மரேஷ் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இதனை பொருட்படுத்தாத இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மரேஷை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த ஜூன் 19-ந் தேதி கல்லூரியின் படித்து வரும் தனது உறவுக்கார மாணவன் பாபுவை அழைத்த விஜய், மரேஷிடம் தக்காளி ஏற்றுவதற்காக டாடா ஏஸ் வாடகைக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட பாபுவும் சொன்னபடி மரேஷை வாடகைக்கு அழைத்து வந்தபோது, விஜய்யும் பாபுவும் ஏற்றிச்செல்ல வேண்டிய தக்காளியைக் காண்பிப்பதாகக் கூறி அவரைத் தங்கள் பைக்கில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர்கள் தக்காளி பண்ணைக்குச் செல்வதற்குப் பதிலாக, சிந்தாமணி தாலுகாவில் உள்ள சித்தேபள்ளி கிராஸ் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மரேஷ் தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்துக்கொண்ட மரேஷின் கழுத்தை அறுத்து அவரது இரத்தத்தை குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை கல்லூரி மாணவர் பாபு வீடியோ எடுத்துள்ளார். இந்த தாக்குதலில் விஜய் சிறிய கத்தியை பயன்படுத்தியதால் மரேஷ் உயிர் தப்பியுள்ளார்.
தொடர்ந்து மரேஷ்க்கு சரியான நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் போலீசில் புகார் செய்யாமல் இருந்தபோதிலும், வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை படம் பிடித்த விஜய்யின் உறவினர் ஜான் பாபுவை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“