Advertisment

கர்நாடக அரசு செயல்படவில்லை; ஆளும் பா.ஜ.க அமைச்சர் ஆடியோவால் சர்ச்சை

கர்நாடகாவில் அரசு செயல்படவில்லை, தேர்தல் வரை சமாளித்து வருகிறோம்; பாஜக அமைச்சர் பேசும் ஆடியோ வெளியீடு; சட்ட அமைச்சர் பதவி விலக மற்ற அமைச்சர்கள் கோரிக்கை

author-image
WebDesk
New Update
கர்நாடக அரசு செயல்படவில்லை; ஆளும் பா.ஜ.க அமைச்சர் ஆடியோவால் சர்ச்சை

Karnataka minister Madhuswamy’s audio clip on ‘govt not functioning’ triggers row, horticulture minister asks him to quit: கர்நாடகாவில் பா.ஜ.க அரசு செயல்படவில்லை என்றும், 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நிர்வாகத்தை சமாளித்து வருவதாகவும் கூறிய சட்ட அமைச்சர் ஜே.சி மதுசாமி தொடர்பான ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisment

அமைச்சர் மதுசாமிக்கும், சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற சமூக சேவகருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல், அரசாங்க விவகாரங்களை நடத்துவதில் மூத்த அமைச்சர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிக்கிறது. இந்த ஆடியோவை காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பிரிவு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் கலவர வழக்கு: பாலியல் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை

அந்த உரையாடலின் போது விவசாயிகளின் நலனுக்காக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட கூட்டுறவு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், திங்கள்கிழமை மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட அமைச்சர் தனது துறையைப் பற்றி கூறியது தவறு என்று கூறினார்.

“தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். விசாரணைக்கு முன் நடவடிக்கை எடுக்க முடியாது. அமைச்சர் கூறியது போல் அரசாங்கம் வலம் வரவில்லை. ஒருவேளை அவருடைய சொந்தத் துறையே அலைந்துகொண்டிருக்கலாம்,” என்று சோமசேகர் கூறினார்.

“அமைச்சராக இருந்து அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறியிருக்கக் கூடாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தோட்டக்கலைத்துறை அமைச்சரும், சோமசேகரின் நெருங்கிய நண்பருமான முனிரத்னா கூறினார்.

அந்த உரையாடலில், மாநிலம் முழுவதும் விவசாயிகள் வாங்கிய ரூ.50,000 மதிப்பிலான கடனை புதுப்பிக்க கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ரூ.1300 கேட்டதாக பாஸ்கர் புகார் செய்தார்.

“வட்டி செலுத்த வேண்டிய நிதிகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் கோரப்படுவதாகவும் கூறப்படும் திரு. சோமசேகரின் (கூட்டுறவு அமைச்சர்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் நான் அறிவேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - என்ன செய்ய முடியும்? என்று அந்த கிளிப்பில் அமைச்சர் மதுசாமி கூறுவது கேட்கிறது.

மேலும், “விவசாயிகள் மட்டுமல்ல, நான் கூட வங்கி அதிகாரிகளால் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இங்கு செயல்படும் அரசாங்கம் இல்லை, நாங்கள் விஷயங்களை நிர்வகித்து, எட்டு மாதங்களுக்கு (2023 மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் போது) தள்ளுகிறோம், ”என்றும் அமைச்சர் கூறுகிறார்.

கர்நாடக பா.ஜ.க அரசின் கையாலாகாத்தனத்திற்கு இந்த உரையாடல் எடுத்துக்காட்டு என காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. “அரசின் அலட்சியம், அமைச்சர்களின் திறமையின்மை, விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை அமைச்சர் மதுசுவாமியால் அம்பலமாகியுள்ளது. ஊழல் மேலாண்மை சேவையாக மட்டுமே பா.ஜ.க அரசு செயல்படுகிறது. பசவராஜ் பொம்மை அரசின் கையாலாகாத்தனத்திற்கும் விவசாயிகளுக்கு அநீதி இழைத்ததற்கும் இதைவிட சிறந்த ஆதாரம் எதுவுமில்லை” என எதிர்க்கட்சியினர் ட்வீட் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment