Advertisment

கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் சொத்துப் பட்டியல்: 3 முதல் 8 மடங்கு வரை அதிகரிப்பு

கர்நாடக மின்துறை அமைச்சர் சுனில் குமாரின் அசையும் சொத்துக்கள், 2018ல் ரூ. 53.27 லட்சத்தில் இருந்து 2023ல் ரூ. 1.59 கோடியாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
karnataka ministers bjp assests elections Tamil News

From L-R: V Sunil Kumar, K Sudhakar, T Somasekhar, CC Patil, Murugesh Nirani (File/Facebook)

Karnataka ministers and rising wealth Tamil News: 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகின. இந்த தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

Advertisment

இந்நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் உள்ள 5 அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் சொத்துக்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது என்று அவர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.சுதாகர், மின்துறை அமைச்சர் வி சுனில் குமார், பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் மற்றும் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோரின் சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மாநில தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரங்களில், 2019-ல் பாஜகவுக்குத் தாவிய 17 கிளர்ச்சியாளர்களில் ஒருவரான சுதாகரின் அசையும் சொத்துக்கள் 2018-ல் ரூ.1.11 கோடியிலிருந்து 2023-ல் ரூ.2.79 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அசையாச் சொத்துக்கள் ஏறக்குறைய அப்படியே உள்ளன. அதேவேளையில், சுதாகரின் மனைவி டாக்டர் ப்ரீத்தி ஜிஏ தனது அசையா சொத்துக்களில் பெரும் ஏற்றத்தை கண்டுள்ளார். இது 2018ல் ரூ.1.17 கோடியிலிருந்து 2023ல் ரூ.16.1 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் பெங்களூரு சதாசிவநகரில் ரூ.14.92 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியதும் இதில் அடங்கும்.

2019 இல் கிளர்ச்சியாளர்களில் ஒருவரான சோமசேகரின் அசையும் சொத்துக்கள், 2018 இல் ரூ.67.83 லட்சத்தில் இருந்து ரூ.5.46 கோடியாக எட்டு முறை உயர்ந்துள்ளது. மறுபுறம், குமாரின் அசையும் சொத்துக்கள், 2018 இல் ரூ. 53.27 லட்சத்தில் இருந்து 2023 இல் ரூ. 1.59 கோடியாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் அசையா சொத்துக்கள் ரூ. 1.68 கோடியிலிருந்து ரூ. 4.03 கோடியாக இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

நிராணியின் அசையும் சொத்துக்கள் 16 கோடியில் இருந்து 27.22 கோடியாகவும், அசையா சொத்துக்கள் 4.58 கோடியில் இருந்து 8.6 கோடியாகவும் கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அவரது மனைவி கமலா நிராணி தனது அசையும் சொத்துக்கள் 2018 இல் ரூ.11.58 கோடியிலிருந்து ரூ.38.35 கோடியாக உயர்ந்துள்ளது.

பாட்டீலின் அசையும் சொத்துக்கள் 2018ல் ரூ.94.36 லட்சத்தில் இருந்து ரூ.3.28 கோடியாகவும், இந்த ஐந்தாண்டு காலத்தில் அவரது அசையா சொத்துகள் ரூ.4.47 கோடியிலிருந்து ரூ.7.2 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வாக்குமூலம்

கே சுதாகர்
2023

அசையும் சொத்துக்கள் – 2.79 கோடி (மனைவி டாக்டர் ப்ரீத்தி ஜிஏ 6.59 கோடி)
அசையா சொத்துக்கள் – ரூ. 2.66 கோடி (மனைவி 16.1 கோடி, செப் 1, 2022 அன்று வாங்கிய 14.92 கோடி சதாசிவநகர் வீடும் அடங்கும்)
பொறுப்புகள் - ரூ 1.6 கோடி (மனைவி 19.06 கோடி)

2018

அசையும் சொத்துக்கள் - ரூ 1.11 கோடி (மனைவி 10.76 கோடி)
அசையா சொத்துக்கள் – ரூ 2.34 கோடி (1.17 கோடி)
பொறுப்புகள் – ரூ 15.94 லட்சம் (மனைவி ரூ 10.7 கோடி)

—————————-

முருகேஷ் நிராணி
2023

அசையும் சொத்துக்கள் - ரூ 27.22 கோடி (மனைவி கமலா நிராணி 38.35 கோடி)
அசையா சொத்துக்கள் – ரூ 8.6 கோடி (23.85 கோடி)
பொறுப்புகள் - ரூ 22.62 கோடி (47.56 கோடி)

அசையும் சொத்துக்கள் - ரூ 16 கோடி (மனைவி 11.58 கோடி)
அசையா சொத்துக்கள் – 4.58 கோடி (20.3 கோடி)
பொறுப்புகள் - ரூ 8.31 கோடி (15.23 கோடி)

—————————

சிசி பாட்டீல்
2023

அசையும் சொத்துக்கள் - 3.28 கோடி
அசையா சொத்துக்கள் - ரூ 7.2 கோடி
பொறுப்புகள் - ரூ 3.22 கோடி

2018

அசையும் சொத்துக்கள் - 94.36 லட்சம்
அசையா சொத்துக்கள் – 4.47 கோடி
பொறுப்புகள் - 1.09 கோடி

—————————

வி சுனில் குமார்
2023

அசையும் சொத்துக்கள் - ரூ 1.59 கோடி (மனைவி 1.42 கோடி)
அசையா சொத்துக்கள் - ரூ 4.03 கோடி
பொறுப்புகள் - ரூ 45.15 லட்சம்

2018

அசையும் சொத்துக்கள் - ரூ 53.27 லட்சம் (62.29 லட்சம்)
அசையா சொத்துக்கள் - ரூ 1.68 கோடி
பொறுப்புகள் - ரூ 69.43 லட்சம்
———————————

எஸ்டி சோமசேகர்
2023

அசையும் சொத்துக்கள் - 5.46 கோடி
அசையா சொத்துக்கள் - ரூ 8.91 கோடி
பொறுப்புகள் - ரூ 1.22 கோடி

2018

அசையும் சொத்துக்கள் - 67.83 லட்சம்
அசையா சொத்துக்கள் - ரூ 8.14 கோடி
பொறுப்புகள் - ரூ 92 லட்சம்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Bjp India Karnataka Karnataka Election Basavaraj Bommai Karnataka State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment