Karnataka mom mortgages her mangal sutra to buy tv for her children's online classes : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலுவையில் உள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி குறித்து அனைவருக்கும் கேள்விகள் எழுகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல் மூலமாக வகுப்புகள் எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க : டிவியில் மேட்ச் பார்க்கும் நாய்… வீடியோ ஏன் வைரலாச்சுன்னு இப்போ தான் தெரியுது!
ஏழை விவசாயிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் ஏற்கனவே வேலையற்று இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் என்பதும், தொலைக்காட்சி என்பதும் ஆடம்பர செலவாக இருக்கிறது. தங்களின் குழந்தைகளாவது படித்து முன்னேறட்டும் என்று பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்மார்ட்போன் மற்றும் தொலைக்காட்சி வாங்குவதல் என்பது குதிரைக் கொம்பான நிகழ்வு.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த வாரம், ஒரு ஏழை பால் விற்பனையாளர், தன்னுடைய ஒரே வருவாய் ஆதாரமான பசுமாட்டை விற்று தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தார். கர்நாடகாவில் இருக்கும் கதக் பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகளின் ஆன்லைன் வகுப்பிற்கு டிவி வாங்க தன்னுடைய தாலியை அடமானம் வைத்துள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
கஸ்தூரி என்ற பெண் கதக் மாவட்டம் நரகுந்த தாலுகாவில் அமைந்திருக்கும் ரட்டேரநாகனூரு கிராமத்தை சேர்ந்தவர். இந்த விவகாரம் அறிந்த கர்நாடக அமைச்சர் சி.சி.பாட்டீல், அப்பெண் அடமானம் வைத்த தாலியை மீட்டு தருவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையில், அடமானம் பெற்ற நபரே தாலியை கஸ்தூரியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க : நீங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா?