scorecardresearch

கர்நாடகா தேர்தல்: 7% வாக்குகள்; பா.ஜ.கவை விட 70 இடங்களைப் பெற்ற காங்கிரஸ்

மும்பை கர்நாடகா, மத்திய கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா மற்றும் பழைய மைசூர் பகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

karnataka polls
karnataka polls

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பா.ஜ.க 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சியை இழந்தது.

இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளிலும் பா.ஜ.க மாநிலத்தில் தனது மொத்த வாக்குப் பங்கான 36 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டது, ஆனால் சட்டமன்றத்தில் முந்தைய 116 இடங்களில் 40 சதவீத இடங்களை இழந்துள்ளது.

பாஜக 36 சதவீத வாக்குகளுடன் 65 இடங்களை வென்றதற்குக் காரணம் – 2018 ஆம் ஆண்டு அதே வாக்கு சதவீதத்துடன் 104 இடங்களைப் பெற்றதைப் போலல்லாமல் – அதிக வாக்கு சதவீதம் மாநிலத்தின் இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது. பழைய மைசூர் மற்றும் பெங்களூருவில் 2018 ஆம் ஆண்டைப் போலல்லாமல், அங்கு அதிக வாக்குப்பதிவு நடைபெற்றது. வெற்றி பெற வில்லை என்றாலும் அது தென் கர்நாடகாவில் உள்ள ஜேடிஎஸ் வாக்குகளை பிரித்தது, இது பா.ஜ.க தனது வாக்குகளை தக்க வைக்க உதவியது.

காங்கிரஸ், பா.ஜ.க, ஜேடிஎஸ் தொகுதி வாரியாக வாக்கு சதவீதங்களைப் பார்த்தால் இந்த முறை ஒட்டு மொத்தமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. காங்கிரஸ் அதன் வாக்குப் பங்கை 38 சதவீதத்தில் இருந்து (80 இடங்கள்) அதிகரித்துள்ளது. 2018 இல் 135 இடங்களை வெல்வதற்கு 43 சதவீதமாக இருந்தது, அதே சமயம் ஜேடிஎஸ் அதன் வாக்குப் பங்கை 18 சதவீதத்திலிருந்து (37 இடங்கள்) 13 சதவீதமாகக் குறைத்து 19 இடங்களை வென்றது.

காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள 7 சதவீத வாக்கு வித்தியாசத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே 70 இடங்கள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலங்களில் பாஜக கோட்டையாக இருந்த மும்பை கர்நாடகா, மத்திய கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு அமோக வெற்றி பெற்றது. அதேபோல் ஜேடிஎஸ் வசம் இருந்த பழைய மைசூர் பகுதியிலும் அமோக வெற்றி பெற்றதே காங்கிரஸ் பெரிய வெற்றி பெற காரணமாக அமைந்தது.

மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் லிங்காயத் சமூகத்தினர், மாநிலத்தில் மிகப்பெரிய சமூகத்தினர் (17 சதவீதம்) அங்கு வசிக்கின்றனர். இங்கு காங்கிரஸ் 50 இடங்களில் 33 இடங்களை வென்றது. இது 2018 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது கிடைத்த முடிவுகள் தலைகீழாக மாறியது. அப்போது பாஜகவின் 31 இடங்களுக்கு எதிராக 16 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் பெற்றது.

ஹைதராபாத் கர்நாடகா பிராந்தியத்தில், காங்கிரஸ் 40 இடங்களில் 26 இடங்களை வென்றது, இது 2018 இல் பிராந்தியத்தில் வென்ற 21 இடங்களிலிருந்து ஐந்து இடங்கள் அதிகமாகும், அதே நேரத்தில் பாஜக 10 இடங்களை வென்றது. இது 2018 இல் இருந்து மூன்று இடங்களை விட குறைவாகும்.

மத்திய கர்நாடகா பிராந்தியத்தில், 23 இடங்களில் 19 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, 2018 உடன் ஒப்பிடும்போது ஏழு இடங்கள் அதிகரித்து, 2018 இல் வென்ற 10 இடங்களிலிருந்து பாஜகவின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது.

64 இடங்களைக் கொண்ட பழைய மைசூர் பிராந்தியத்தில், காங்கிரஸ் 64 இடங்களில் 43 இடங்களில் வென்றது. இது 2018-ஐ விட 23 இடங்கள் அதிகமாகும். இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்டுகிறது. இப்பகுதியில் பாஜக 11 இடங்களையும், ஜே.டி.எஸ் 12 இடங்களையும் இழந்தன.

2018 ஆம் ஆண்டைப் போலல்லாமல், பெங்களுருவில் பாஜக 28 இடங்களில் 15 இடங்களில் வென்றது. கடந்தமுறை பாஜக 11 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் வென்றது. இருப்பினும் பாஜக வலுவாக உள்ள கரையோர கர்நாடகா பிராந்தியத்தில்
19 இடங்களில் 16 இடங்களில் மட்டுமே வென்றது. முன்பாக 16 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் இம்முறை இப்பகுதியில் 6 இடங்களை வென்றது – 2018 இல் இருந்து மூன்று இடங்கள் அதிகம் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka polls 7 that gave congress 70 seat boost over bjp