Karnataka election – Social Democratic Party of India tamil news: கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று தெரிவித்துள்ளது.
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியானதுகடந்த 2009-ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI – பிஎஃப்ஐ) அமைப்பிலிருந்து உருவானது. மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடந்த செப்டம்பரில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கேஎச், தற்போது மைசூரில் உள்ள நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற வேட்பாளர்கள் பி.ஆர்.பாஸ்கர் பிரசாத் (புலகேசிநகர்), அப்துல் ஹன்னன் (சர்வஞானநகர்), இலியாஸ் முகமது (பண்ட்வால்), அல்பான்சோ பிராங்கோ (மூடபித்ரி), அக்பர் பெல்தங்கடி (பெல்தங்கடி), ஹனீப் முளூர் (காப்பு), இஸ்மாயில் ஜபியுல்லா (தாவங்கரே தெற்கு) ), பாலேகை ஸ்ரீனிவாஸ் (சித்ரதுர்கா), மற்றும் நசீர் கான் (விஜயநகர்) ஆகியோர் ஆவர்.
எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியான மொத்தம் 100 தொகுதிகளில் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அது அறிவித்த 54 இடங்கள் பெரும்பாலும் கடலோர கர்நாடகா, பெங்களூரு மற்றும் பழைய மைசூரு பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி பேசுகையில், “பாஜகவுக்கு எந்த கொள்கையும் இல்லை. வகுப்புவாத வெறுப்பை மட்டுமே அதன் கொள்கையாக கொண்டுள்ளது. வளர்ச்சி, சாலை, சாக்கடை சுத்தகரிப்பு என்று கேட்காமல், லவ் ஜிகாத் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பாஜகவின் மாநிலத் தலைவர் கேட்டுக் கொண்டதே இதற்குச் சான்றாகும்.” என்று கூறினார்.
எஸ்.டி.பி.ஐ., போட்டியிடுவதால், பா.ஜ.,வுக்கு பலன் கிடைக்கும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் அல்லது ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சிக்கு வரும்போது, இதே அச்சத்தை ஏன் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் எங்கள் அரசியலைச் செய்வோம்.” என்றார்.
அரசியல் கணக்கீடுகளின் காரணமாக பாஜக தலைமையிலான அரசு SDPI யை தடை செய்யவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த ஃபைசி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. ஆனால், பாஜக அல்ல. இதற்கு காங்கிரஸ் தான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil