224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படும் போது என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்த ஆரம்பகட்ட விவாதங்களில் மாநில அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
குறைந்தபட்சம் மூன்று கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அக்கட்சியினரிடையே, குறிப்பாக முதல்வர் பதவி குறித்து மிகப்பெரிய சலசலப்பு நிலவியது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெங்களூரு இல்லத்தில் வெள்ளிக்கிழமை திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களில் மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார், கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் ஜி பரமேஸ்வரா மற்றும் அதன் கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்குவர்.
இந்தத் தேர்தலில் முதல்வர் பதவிக்கான போராட்டம், காங்கிரஸ் வெற்றி பெற்றால், டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இடையே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சித்தராமையா தனது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் தனித்தனியாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கட்சிக்காக பாடுபட்டுள்ளேன், அனைவரும் (என்னை) ஆதரிப்பார்கள். இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து (2019) தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்த பிறகு (கேபிசிசி தலைவர்) பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் தூங்கவில்லை, தூங்கவும் மாட்டேன். கட்சிக்கு தேவையானதை நான் செய்துள்ளேன். அனைவரும் என்னை ஆதரிப்பார்கள், நல்ல ஆட்சியை வழங்குவேன்” என்றார்.
தெற்கு கர்நாடகாவின் வொக்கலிகா பெல்ட்டில் 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என சிவக்குமார் நினைக்கிறார். மேலும், ஒக்கலிக்கா சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார் காங்கிரஸ் 141 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணித்துள்ளார். இது தேர்தல் கருத்துக் கணிப்புகளை காட்டிலும் அதிகம்.
அவரது இல்லத்தில் நடந்த கூட்டங்களைத் தவிர, குருபா ஓபிசி தலைவரான சித்தராமையா, மைசூரு பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
சிவக்குமார் அல்லது காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், தற்போதைய நிலவரப்படி, எண்ணிக்கை விளையாட்டில் சித்தராமையா முன்னிலையில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பெயரை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று சித்தராமையா பலமுறை கூறினார்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே முதல்வர் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான தலித் இனத்தைச் சேர்ந்த ஜி பரமேஸ்வராவுக்கும் முதல்வர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், ஜேடி(எஸ்) கட்சி எந்தப் பக்கத்துடன் கைகோர்த்தாலும், கடுமையான பேரம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மருத்துவச் சிகிச்சைக்காக குமாரசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். தொங்கு பேரவை ஏற்பட்டால் அவர் தனது எம்.எல்.ஏ.க்களை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.
கருத்துக்கணிப்பு வெளியானதில் இருந்து பாஜக தனது பதிலில் முடக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை கூடினர்.
அப்போது கர்நாடகத்தில் ஆட்சியை தொடர வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் பாஜக போட்டியிட சீட் மறுத்த நிலையில் தனியாக போட்டியிட்ட லதா மல்லிகார்ஜுன், அருண் புத்திலா மற்றும் மடல் மல்லிகார்ஜுனா ஆகியோர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.