Advertisment

கர்நாடக பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மோதல்: மாறி மாறி பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Karnataka Roopa Moudgil Rohini Sindhuri row Tamil News

On Sunday, Roopa (Right) shared on her Facebook page seven pictures of Sindhuri (Left), alleging that the latter allegedly shared them with IAS officers in 2021 and 2022. (Source: Facebook)

IPS officer D Roopa Moudgil vs IAS officer Rohini Sindhuri Tamil News கர்நாடக மாநில இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருந்து வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவர், மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் அமைச்சரான சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த மகேஷ், ரோகிணி சிந்தூரி மீது வழக்கும் தொடர்ந்தார். அதில், சா.ரா.மகேஷ் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பது தெரியவந்தது.

Advertisment

அதே நேரத்தில், ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ரோகிணி சிந்தூரி விவகாரத்தை மகேஷ் எழுப்பி இருந்தார். இந்த விவகாரங்கள் ரோகிணி சிந்தூரிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன்பிறகு, முன்னாள் முதல்வர் குமாரசாமி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன் மூலமாக சா.ரா.மகேசை சந்தித்து ரோகிணி சிந்தூரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சனிக்கிழமை நடந்த இந்த சமாதான பேச்சுவார்த்தைக்குப்பிறகு பேசிய மகேஷ், “நான் மன்னிப்பு கேட்கும் நபர் அல்ல. ஆனால், அவர் (சிந்தூரி) மாற வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அதை மீண்டும் செய்யக்கூடாது." என்றார்.

மேலும், சில ஆவணங்களை அரசு மற்றும் தலைமைச் செயலரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த எம்.எல்.ஏ மகேஷ், “அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்….. நான் எந்த ஒரு நடவடிக்கையையும் தொடங்கவோ அல்லது இதைப் பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவோ எந்த அழுத்தத்தையும் கொடுக்க மாட்டேன்." என்றும் கூறியிருந்தார்.

ரோகிணி சிந்தூரி மீது ரூபா ஐ.பி.எஸ். குற்றச்சாட்டு

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா, 19 குற்றச்சாட்டுகளை கூறி அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரூபா தனது முகநூல் பக்கத்தில் சிந்துரியின் 7 புகைப்படங்களைப் பகிர்ந்தார். அந்த பதிவில் ரூபா, "ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி அத்தகைய படங்களை அனுப்பாமல் இருந்தால் என்ன அர்த்தம்? ஒன்று, இரண்டு அல்ல மூன்று ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளா? அப்படியானால் இது (சிந்தூரியின்) தனிப்பட்ட விஷயம் அல்ல” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை ரோகிணி சிந்தூரி 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

ஒரு நாள் முன்னதாக, “அனைத்திந்திய சேவை நடத்தை விதிகளின்படி, இதுபோன்ற படங்களைப் பகிர்வதும், உரையாடுவதும் குற்றம்” என்றும் ரூபா ஐ.பி.எஸ் கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சிந்துரி மீது "தவறான அனுதாபத்தைக் கொண்டிருக்க வேண்டாம்" என்றும் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். "அவற்றை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

ரூபா எழுப்பிய பிரச்சினைகளில், சிந்துரி மாவட்டத்தில் அவர் பதவி வகித்த காலத்தில் மைசூரு டிசி இல்லத்தில் (சன்னிதி) நீச்சல் குளம் - பாரம்பரிய கட்டிடம் கட்டப்பட்டது தொடர்பாக துறை ரீதியான விசாரணையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரவிசங்கர் அவருக்கு எதிரான முதற்கட்ட விசாரணையில் அவர் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது. மேலும், “இன்னும் துறை ரீதியான விசாரணை எதுவும் இல்லை. அவரூக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்கள்?” என்றும் கேள்வியெழுப்பினார்.

ரோகினி மீதான 19 குற்றச்சாட்டுகளில், அவரது குடும்பத்தினருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் உதவுவதற்காக, நில அளவைத் துறை, செட்டில்மென்ட் மற்றும் நிலப் பதிவேடுகள் துறையிடம் இருந்து விவரங்களைப் பெறுவதற்கு அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, அசையா சொத்துகள் விபரத்தை தெரிவிக்காதது, பள்ளி பைகளை அதிக விலைக்கு விற்றதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் மீது விசாரணை கோரி லோக் ஆயுக்தா புகார் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி டி கே ரவியின் தற்கொலையில் அவரது பங்கு ஆகியவை அடங்கும்.

ரோகிணி சிந்துரி அறிக்கை

இதனைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை ரோகிணி சிந்துரி வெளியிட்ட ஊடக அறிக்கையில், "ரூபா தனக்கு எதிராக தவறான, தனிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை நடத்துகிறார். இது அவரது நிலையான செயல்பாடாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தவறான நடத்தை மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான அவரது நடவடிக்கைகளுக்கு, உரிய அதிகாரிகளுடன் சட்ட மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

என்னை இழிவுபடுத்துவதற்காக அவர் சமூக ஊடகங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் (எனது) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்ஷாட்களை சேகரித்துள்ளார். இந்த படங்களை நான் சில அதிகாரிகளுக்கு அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளதால், அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு நான் அவரை வலியுறுத்துகிறேன். ”என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேட்டபோது, ​​“இந்தப் பிரச்சினை தனிப்பட்ட இயல்புடையது” என்றார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Karnataka Bangalore Karnataka State Ips Ias Officer Ips Officers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment